சூர்யா கையில் இருந்த கொலுசு, விஜி கேட்ட கேள்வி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லியிடம் நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டா நீங்க திட்ட மாட்டீங்களே என்று சொல்ல நீ கேக்கறதை பொறுத்து தான் இருக்கு என்று சொல்லுகிறார். எனக்கும் சரி நீங்க சுரேகாக்கும் சரி நிறைய நகை வாங்கி கொடுத்து இருக்கீங்க ஆனா கொஞ்ச நாள் முன்னாடி நம்ம வீட்டுக்கு திருடன் வந்து எல்லாமே எடுத்துட்டு போயிட்டான் இல்ல என்று சொல்ல சுந்தரவல்லி இப்ப என்ன உனக்கு நகை வேணும் அதுக்காக இப்படி பேசிகிட்டு இருக்கியா என்று கேட்க, அதற்கு எனக்காக இல்லம்மா உங்களுக்காக தான் ஒரு பங்க்ஷன் வீட்டுக்கு போயிருந்தோம் இல்ல அங்க என்ன சுந்தரவல்லி அம்மாவோட பொண்ணு இவ்வளவு சிம்பிளா போட்டுட்டு வந்துருக்காங்கன்னு கேள்வி கேட்டாங்க என்று சொல்ல சரி விடு அடுத்த மாசம் வாங்கி தரேன் என்று சொல்லுகிறார். ரேணுகா மதியம் சாம்பார் வைக்கவா என்று கேட்க சுந்தரவல்லி எப்ப பார்த்தாலும் சாம்பார் தான் என்று கேட்கிறார்.

மாதவி உருண்டை குழம்பு வைக்க சொல்லு என்று சொல்ல, அது நந்தினி அக்காவிற்கு தான் வைக்க தெரியும் எனக்கு தெரியாது என்று சொல்லுகிறார். அப்போ அவளையே வைக்க சொல்லு என்று சொல்ல காலையிலிருந்து அவங்க கிச்சனுக்கு வரலை என்று சொல்லுகிறார் அப்போ தூங்கிட்டு இருக்காளா எழுப்பி கூட்டிட்டு வா என்று அனுப்ப ரேணுகா வீடு முழுக்க நந்தினியை தேடுகிறார். பிறகு ஓடிவந்து மாதவி மற்றும் சுந்தரவல்லி இடம் சூர்யா சாரோட காரும் இல்ல நந்தினி அக்காவும் ஆளில்ல என்று சொல்ல, சரி நீ போய் சாம்பார் செய் என்று அனுப்பி வைத்து விடுகிறார். உடனே மாதவி அப்போ சூர்யாவும் இல்ல நந்தினி இல்லன்னா இவங்க ரெண்டு பேரும் எங்கேயாவது ஜோடியா வெளியே போயிருப்பாங்க என்று சொல்ல அவதான் இந்த வீட்டு மகாராணி ஆச்சே அவளைக் கேட்க யார் இருக்காங்க என்று சொல்லுகிறார். நான் நந்தினிக்கு போன் பண்றேன் என்று சொல்ல நந்தினி போனை எடுக்காமல் இருக்கிறார் உடனே சுந்தரவல்லி நீ எதுக்கு அவளுக்கு பண்ற என்று திட்டுகிறார்.

உடனே சூர்யாவிற்கு ஃபோன் போட சூர்யாவும் போனை எடுக்காமல் இருக்க அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வருகிறார். சுந்தரவல்லி சூர்யாவ ஆளக்காணோம் தேடிகிட்டு இருக்கோம் எங்க போயிருக்கான் என்று சொல்ல நந்தினியும் ஆள் இல்லப்பா என்று சொல்லுகிறார் அதெல்லாம் ஒன்னுமில்ல அவங்க ரெண்டு பேரும் கோயிலுக்கு போய் இருக்காங்க என்று சொல்லுகிறார். கோயிலுக்கு போனோம்னா என்கிட்ட சொல்லணும் அக்கா தங்கச்சி கிட்ட சொல்லணும் அவ யாரு கூட்டிட்டு போவ என்று சொல்ல இதில் போய் என்ன இருக்கு என்று அருணாச்சலம் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அவ கோவிலுக்கே போயிருந்தாலும் வீட்டு வேலை செஞ்சுட்டு தானே போயிருக்கணும் அவ வரட்டும் இருக்குது என்று மாதவி சொல்ல என் முன்னாடி தான் அக்காவும் தங்கச்சிக்கும் இந்த பந்தா எல்லாம் என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி சென்று விடுகிறார். ரெசார்டில் கேம்ப் ஃபயர் போட்டு அதில் நால்வரும் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யா சொன்ன மாதிரி சரக்கு பாட்டில் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றனர். வந்த வேகத்தில் சூர்யா மற்றும் விவேக் இருவரும் குடிக்க போக, விஜி விவேக்கை குடிக்க கூடாது என சொல்லுகிறார்.

உடனே சூர்யா மட்டும் நானே குடிச்சுக்குறேன் என்று முடிவு எடுக்க நான் குடிக்காம நீ குடிச்ச உனக்கு போதை ஏறாது என்று சொல்லி பிளாக் மெயில் பண்ண சூர்யா முதலில் விவேக்கிற்கு கொடுத்துவிட்டு அவரும் கொடுக்கிறார். விஜி இது மாதிரி உங்க ஊர்ல பண்ணி இருக்கீங்களா என்று கேட்க, மார்கழி மாசத்துல குளிர் காய்வோம் என்று சொல்லுகிறார். உடனே விவேக் கண் காண்பித்து விஜியிடம் இவங்க ரெண்டு பேரும் இருக்கட்டும் நம்ம போகலாம் என்று முடிவு எடுக்க உடனே விஜியும் நாங்க வாக்கிங் போறோம் என்று சொல்லி கிளம்புகின்றனர். பிறகு கொஞ்ச நேரம் சூர்யாவும் நந்தினியும் பேசிக்கொண்டிருக்க, சூர்யா நந்தினையை ஒரு பொருள் எடுத்துக் கொண்டு வர சொல்லுகிறார் நந்தினி எடுத்துக்கொண்டு வரும்போது தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்.

நந்தினி வலியில் கத்த சூரியா ஓடி வந்து பார்த்து காலை தொட்டு பார்க்க கால் தடுமாறி மடக்கி கீழே விழுந்துட்டேன் ரொம்ப வலிக்குது என்று சொல்ல சூர்யா ஹாஸ்பிடல் போகலாமா என்று கேட்கிறார். அதையெல்லாம் வேண்டாம் என்று சொல்ல விஜி மற்றும் விவேக் வந்து என்னாச்சு என்று கேட்க, காலில் சுளுக்கு புடிச்சி விட்டது என்று சொல்லுகிறார். உடனே விஜி சுளுக்கு மருந்து எடுத்துக் கொண்டு வந்து தேய்த்து விடப் போக, விவேக் சூர்யாவிடம் மருந்து கொடுத்து தேய்க்க சொல்லுகிறார். நந்தினி நானே தேய்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல விஜி சுலுக்கு மருந்துனா மத்தவங்க தான் தேய்க்கணும் என்று சொல்ல அப்ப நீங்க தேச்சு விடுங்க என்று சொல்லுகிறார். விஜி வாங்க போக விவேக் உடனே கை சுளுக்கு புடிச்சது போல நடித்து விஜியை அழைத்து சென்று விடுகிறார். பிறகு சூர்யா மருந்து தேய்த்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். கொஞ்ச நேரம் கழித்து வந்த இருவரும் தங்கச்சிய ரூமுக்கு தூக்கிட்டு போ என்று சொல்லுகிறார். வேணா நான் நடந்தே போறேன் என்று நந்தினி எழுந்திருக்க அவரால் எழுந்திருக்க முடியாமல் மீண்டும் உட்கார்ந்த விடுகிறார் பிறகு இருவரும் கட்டாயப்படுத்தி சூர்யாவை தூக்கிக் கொண்டு போக சொல்ல சூர்யாவும் தூக்கிச் செல்கிறார். என் நண்பனை இனிமே யாராலும் தடுக்க முடியாது சுந்தரவல்லி அம்மா நீங்க பாட்டி தான் என்று இருவரும் சொல்லி சிரித்துவிட்டு செல்கின்றனர். பிறகு சூர்யா நந்தினி தூக்கிகொண்டு வந்து கட்டிலில் உட்கார வைக்கிறார்.

பிறகு நீ படுத்துக்கோ என்று சொல்ல நான் படுத்துக்கிறேன் நீங்க இங்க படுத்துக்கோங்க என்று சொல்லியும் கேட்காமல் நந்தினி எழுந்து போக தடுமாறி விழப்போக சூர்யா தாங்கி பிடிக்கிறார். பிறகு ஒரு சேரில் உட்கார வைத்து நந்தினியின் காலை எடுத்து அவரது காலின் மீது வைத்து நான்தான் இங்கேயே படு என்று சொல்கிறேனே ஏன் கேட்க மாட்டேங்கிற என்று சொல்லி காலை நீவி விட நந்தினி வலியில் கத்துகிறார். அதுக்கு தான் நான் உன்னை இங்கேயே தூங்குன்னு சொன்னேன் என்று சொல்ல போதும் சார் போதும் சார் என சொல்லிக் கொண்டே இருக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நானே சரி பண்றேன் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து போன் வர சூர்யா நந்தினி போன் எடுக்க சொல்லுகிறார் நந்தினி கை எட்டாமல் இருக்க, நீ ஸ்டெயின் பண்ணாத நானே எடுக்கிறேன் என்று நந்தினி முன் எட்டி எடுக்க நந்தினியின் தாலி செயின் சூர்யாவின் சட்டையில் மாட்டிக் கொள்கிறது. நந்தினி பக்கத்தில் சூர்யா கிளோஸ் ஆக இருக்க சட்டையிலிருந்து தாலி செயினை எடுக்க முயற்சிக்கிறார் நந்தினி.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினியின் காலில் இருக்கும் கொலுசு தொலைந்து விட்டதாக சொல்ல சூர்யா புதுசு வாங்கிக்கலாம் என்று சொல்லுகிறார்.இல்லை எனக்கு அது தங்கச்சி வாங்கி கொடுத்தது என்று சென்டிமென்ட் ஆக சொல்ல உடனே விஜி சரி வாங்க நம்ம இன்னொருவாட்டி தேடலாம் என்று சொல்லி கிளம்ப போகும் நேரத்தில் சூர்யாவின் கையில் கொலுசு இருப்பதை விஜி கவனித்து சொல்லுகிறார்.

இது எப்படி வந்துச்சு என்று சூர்யா யோசிக்கும்போது நந்தினியை பெட்டில் படுக்க வைக்கும் போது பெட்ஷீட் காலுக்கு போட கொலுசு கீழே விழுகிறது அதனை நந்தினிக்கு காலில் போட்டு விடுவதாக நினைத்து சூர்யா போதையில் அவரது கையில் போட்டுக் கொள்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

3 hours ago

ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…

11 hours ago

மதராசி : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

11 hours ago

மதராசியில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

12 hours ago

கிரிஷ் விஷயத்தில் முத்து எடுத்த முடிவு, என்ன செய்யப் போகிறார் ரோகிணி? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…

14 hours ago

நந்தினிக்கு கிடைத்த மாலை மரியாதை, கடுப்பாகும் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago