சூர்யா கொடுத்த கிப்ட், அதிர்ச்சியில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அவங்களுக்கு கண்டிப்பா நான் புரிய வைப்பேன் என்று விவேக் இடம் சொல்கிறார். மறுபக்கம் மாதவி சுந்தரவல்லிக்கு போன் போட்டு பத்திரிக்கை எல்லாருக்கும் கொடுத்துட்டீங்களா என்று கேட்க ஆல்மோஸ்ட் முடிய போகுது என்று சொல்ல முதல்ல பத்திரிக்கை பிரிச்சி பாருங்கள் என்று சொல்ல நந்தினி பெயர் இருப்பதை பார்த்துவிட்டு சுந்தரவல்லி கடுப்பாகிறார். யார் பார்த்த வேலை இது என்று சுந்தரவல்லி கேட்க வேறு யாரு சூர்யா தான் என்று சொல்ல சுந்தரவல்லி பத்திரிக்கையை கிழித்து போடுகிறார். கிச்சனில் நந்தினி பத்திரிக்கையை பார்த்துக் கொண்டிருக்க அவர் எப்படி இப்படி பண்ணாரு நைட் எங்கேயுமே அவர் வெளியே போகல என்று சொல்ல அதெல்லாம் சின்னய்யா உட்கார்ந்த இடத்திலிருந்து வேலையை முடிச்சிடுவாரு என்று சொல்லுகிறார்.

இதனால எனக்கு தானே பிரச்சனை வரும் என்று சொல்ல, இந்நேரத்துக்கு மாதவி அம்மா எல்லா விஷயத்தையும் அவங்க கிட்ட சொல்லி இருப்பாங்க அவங்க ஆக்ரோஷமா கிளம்பி இங்கதான் வந்துட்டு இருப்பாங்க என்று சொல்ல, அப்படியெல்லாம் எதுவும் நினைக்காத என்று ஆறுதல் சொல்ல, அவரது தோழி சுந்தரவல்லிக்கு போன் போட்டு என்ன உன் மருமகளை ஏத்துக்கிட்ட போல என்று சொல்ல சுந்தரவல்லி என்னும் கடுப்பாகிறார். சூர்யா வீட்டுக்கு கிப்ட்டுடன் வர நீங்க ஏன் சார் இப்படி பண்றீங்க என்று கேட்க, நான் நடக்கிறது எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று சொல்லி அழைத்துச் சென்று விடுகிறார். சுந்தரவல்லி வீட்டுக்கு வந்து கோபமாக என் கையாலேயே பத்திரிக்கையை கொடுக்க வச்சுட்டால நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்லுகிறார்.

நந்தினி சூர்யா வாங்கிக் கொண்டு வந்திருக்கும் மிகப்பெரிய கிப்டை சுத்தி சுத்தி பார்க்கிறார். உடனே சூர்யா வந்து என்னன்னு தெரிஞ்சுக்கணுமா என்று கேட்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்ல, போட்டோ இருக்கு என்று சொல்ல அது பார்சலை பார்த்தாலே தெரியுது என்ன போட்டோ என்று கேட்க சர்ப்ரைஸ் என்று சொல்லுகிறார். நான் கொஞ்சம் தூரமாவே இருந்து ஐயா பிறந்த நாளை பாத்துக்குறேன் என்னால இதுக்கு தேவை இல்லாத பிரச்சனை என்று கேட்க சூர்யா சரி இந்த விஷயத்தை நீ நேரா அதே மாதிரி இருந்து போ என்று சொல்ல ஐயா ஒத்துக்க மாட்டாரு என்று சொல்லுகிறார் தெரியுது இல்ல அப்படியெல்லாம் பண்ண முடியாது நீ அங்க தான் இருக்கணும் அவர் பக்கத்துல இருந்து நீ மனசார அவரை வாழ்த்தணும் நம்ம ரெண்டு பேரும் பக்கத்துல தான் இருக்கணும் என்று சொல்லுகிறார்.

இன்னைக்கு முக்கால்வாசி பேரு வந்துருவாங்க என்று சுந்தரவல்லி சொல்ல, பேசாம பிறந்தநாள் ஃபங்ஷன் கேன்சல் பண்ணிடலாம் என்று சொல்ல, அப்படியெல்லாம் பண்ண முடியாது ஆனா அதுக்கு பதிலா அவ யாரோட கண்ணலையும் படக்கூடாது அவளுக்கு வேலை கொடுத்துக்கிட்டே இருக்கணும் அதுக்கு நீ தான் மாதவி கரெக்டாக இருப்ப என்று சொல்ல, இன்னைக்கு வர விஐபி எல்லாருக்கும் அவ ஒரு வேலைக்காரின்னு மட்டும்தான் தெரியணும் என்று சொல்ல அப்போ கேக் வெட்டும்போது சூர்யா அவள கூப்பிட்டு நிக்க வைப்பானே என்ன பண்ணப் போறீங்க என்று சொல்ல அதுக்கும் என்னிடம் ஒரு ஐடியா இருக்கு என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் டாடிக்கு கேக் வெட்டும் போது நீ பக்கத்துல இருக்கணும்னு சொன்னேன்ல இப்ப எதுக்கு இந்த வேலையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று நந்தினி அழைத்துச் செல்கிறார்.

சுந்தரவல்லி மாதவி சுரேகா நால்வரும் ஓரமாக இருக்க அசோகன் நீங்க வராமயே மாமா கேக் வெட்டிடுவாரு போலையே என்று சொல்ல அருணாச்சலம் கேக் வெட்டி முதலில் சூர்யாவுக்கும் இரண்டாவதாக நந்தினிக்கும் ஊட்டி விடுகிறார் இதனை பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகியது மட்டுமில்லாமல் சூரியா அருணாச்சலத்திற்கு வாங்கிய கிப்டை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 31-12-25
jothika lakshu

Recent Posts

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

17 hours ago

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…

17 hours ago

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…

17 hours ago

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…

18 hours ago

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி?

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…

18 hours ago

அஜித் 64 படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு.. அப்டேட் கொடுத்த ஆதிக்..!

அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

22 hours ago