தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா விவேக்கிடம் இது எல்லாத்துக்கும் காரணம் தாய்குலமா தான் இருக்கும் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க போலீஸ்காரர் வந்து கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்குவதாக சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார். ஆனால் சூர்யா அப்படியெல்லாம் விட முடியாது அவங்க எங்க மேல போய் கம்ப்ளைன்ட் கொடுத்தா நாங்க அமைதியா இருக்கணுமா அவங்க வந்து இப்போ மன்னிப்பு கேக்கணும் என்று சூர்யா சொல்லுகிறார். சக பிச்சைக்காரர்களும் மன்னிப்பு கேட்கணும் கேட்கணும் என கூச்சல் போட, கோவில் உரிமையாளரும் வந்தே இவங்கள அடிச்சு விரட்டுங்கள் என்று சொல்ல, விவேக்கிடம் சூர்யா இவங்க எல்லாரும் மேலயும் கேஸ் ஃபைல் பண்ணும் என்று சொல்ல போலீஸ் பயந்து கோவில் உரிமையாளரிடம் நீங்க போய் அந்த அம்மாவை கூட்டிட்டு வாங்க என்று சொல்லி அனுப்புகிறார்.
ஆனால் சுந்தரவல்லி வெளியில் வராததால் அனைவரையும் அழைத்துக் கொண்டு சூர்யா கோவிலுக்குள் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம் செய்கிறார். உடனே சுந்தரவள்ளியும் வந்து நிற்க முதலில் கேஸ் கொடுத்தீங்க அப்புறம் வாபஸ் வாங்குறீங்க என்று கேட்க நான் தான் இப்ப மன்னிச்சுட்டேன் இல்ல துரத்தி விடுங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். பிறகு நடந்த விஷயம் என்ன என்று போலீஸ் கேட்க அந்த ஆள் என்னுடைய புடவையை பிடித்து இழுத்தான் என்று சொல்ல நான் பிச்சை எடுக்கும்போது கை தெரியாமல் பட்டுடுச்சு அதுக்கு தட்ட தட்டி விட்டுட்டு கேவலமா பேசுறாங்க என்று சொல்லுகிறார். என்ன மேடம் இவங்க இப்படி சொல்றாங்க என்று கேட்க பதில் சொல்லுங்க மம்மி என்று சூர்யா சொல்லுகிறார். இப்ப என்ன இங்கிலீஷ்ல பிச்சை எடுக்கிறீர்களா என்று கேட்க இவங்க நிஜமாவே என்னோட அம்மா தான் என்று சொல்லுகிறார்.
இவங்க யாரு தெரியுமா? ஏ ஆர் குரூப்ஸ் ஓட ஓனர் தி கிரேட் சுந்தரவல்லி என்று சொல்ல போலீஸ் என்ன மேடம் சொல்றாரு அவர் உங்களோட பையனா என்று கேட்க சுந்தரவல்லி பேசாமல் அமைதியாக இருக்கிறார். நீங்க எதுக்கு பிச்சை எடுக்குறீங்க என்று கேட்க அது ஒரு பெரிய கதை என்று சொல்லிவிட்டு நந்தினி நந்தினி என்று ஒரு பொண்ணு என ஆரம்பிக்க சுதந்திரவல்லி கடுப்பாகி சென்று ஓடுகிறார். பிறகு எனக்கு டைம் ஆயிடுச்சு நான் போய் என்னோட டூட்டியை பார்க்கிறேன் என சென்று விடுகிறார். பிறகு விஜியும் அருணாச்சலம் நந்தினி பக்கத்தில் உட்கார்ந்து நந்தினியை கூப்பிட கண் முழிக்காமல் இருக்கிறார். கோபமாக வீட்டுக்குள் வந்த சுந்தரவல்லி அருணாச்சலத்தை கூப்பிடுகிறார்.
டூருக்கு போகலையா என்று கேட்க ரொம்ப இன்பமாக இருந்தது என்று சொல்லுகிறார். உங்க மகன் சூர்யா இப்போ எங்க இருக்கான் என்று கேட்க, வெளியில் எங்காவது போயிருப்பான் என்று சொல்லி சமாளிக்க, எங்க கருமாரியம்மன் கோவிலுக்காக சுந்தரவல்லி கேட்க அருணாச்சலம் பதட்டமடைகிறார். என் புள்ள சூர்யா அங்க கோவில்ல பிச்சை எடுக்கிறான். பல கோடி சொத்து சாம்ராஜ்யத்தோட சக்கரவர்த்தி அவன் பிச்சை எடுக்கிறது என் கண்ணால பாக்க முடியல என்று சொல்ல நந்தினி கண் முழிக்கிறார். அவ பிச்சை எடுக்க ஓகே கேட்டா நீங்க சம்மதம் சொல்லுவீங்களா கேவலமா நினைக்க மாட்டாங்களா அதனால மரியாதை குறையாதா உங்களுக்கு ஏன் இது புரிய மாட்டேங்குது என்று சொல்கிறார்.
அந்த இடத்துல அவன பாக்கும்போது பெத்த வயிறு பத்தி எரியுது நீங்க எப்படி ஒத்துக்கிட்டீங்க என்று கேட்க நீ சொல்றது எனக்கு புரியுது சுந்தரவல்லி ஆனால் அவன்கிட்ட நான் வேண்டான்னு சொன்ன அவன் கேட்கல அவன இந்த கோலத்தில் பாக்குற சக்தி எனக்கு இல்ல, ஆனாலும் இது அவன் ஆசைப்பட்ட பண்ணல அவன் நேர்த்தி கடன் பண்றதுனால மனச தேத்திக்கிட்டேன் என்று சொன்ன நந்தினியின் கண்கள் கலங்குகிறது. இவ யாரு இவளுக்காக அவன் எதுக்கு பிச்சை எடுக்கணும் அவன் இந்த வீட்டோட ராஜா தெருவில் பிச்சை எடுக்கணுமா என்று கேட்கிறார். உடனே சத்தம் கேட்ட நந்தினி எழுந்திருக்க முயற்சி செய்ய நீ படு நந்தினி என்று சொல்லி விட்டு விஜி சத்தமா பேசாதீங்க நந்தினி முடியாமல் படுத்திருக்கா என்று சொல்ல போதும் வாயை மூடுடி என சொல்லுகிறார். யாரு வீட்டுக்கு வந்து யாரை அமைதியா இருக்க சொல்ற என்று மிரட்டுகிறார். நானே என் பையன் பிச்சை எடுக்கிறான் என்று வயிற்றெரிச்சலில் பேசிகிட்டு இருந்தா இவ யாரு வந்து எனக்கு அட்வைஸ் பண்றதுக்கு என கேட்டு கோபப்படுகிறார். பிறகு நந்தினி கண் கலங்கி அழுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அண்ணா ஏதாவது போன் பண்ணாரா என்று விஜி கேட்க அவன் வேண்டுதல முடிச்சுட்டு பண்ணட்டும் என்று விட்டுட்டேன் என சொல்லுகிறார். என்னோட வேண்டுதலை நல்லபடியா முடிக்க கடவுள் அனுப்புன தேவதைமா நீ என சக பிச்சக்காரர்களில் கண்ணு தெரியாத பெண்ணை பார்த்து சூர்யா கையெடுத்து கும்பிடுகிறார். நந்தினி கண் முழித்து சூர்யா சார் எங்க அக்கா என்று கேட்க விஜி என்ன சொல்ல போகிறார்? என்ன நடக்கப் போகிறது? என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
