தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா டென்ஷனாக இருக்க விவேக் என்னாச்சுடா என்று கேட்கிறார். இப்போ சரக்கடிச்சு ஆகணும் என்று கேட்க எதுக்குடா அதெல்லாம் என்று விவேக் கேட்கிறார்.விஜிக்கு நான் எதுவுமே இதுவரைக்கும் செஞ்சதில்ல ஆனால் நந்தினி சொல்லித்தான் எனக்கு இது மாதிரி ஒரு முறை இருக்குன்னு எனக்குத் தெரியும். விஜி எவ்வளவு சந்தோஷபட்டா அதே மாதிரி எங்க வீட்ல அக்கான்னு ஒன்னு இருக்குல்ல அதுக்கு கொடுக்கறதுக்கு போகும்போது மொத்தத்தையும் தட்டி விட்டு டென்ஷன் பண்ணிட்டாங்க என்று சொல்ல,சரி இப்ப குடிக்க போகலாம் என சொல்லுகிறார். பிறகு இருவரும் உட்கார்ந்து குடிக்கின்றனர். இந்த நந்தினி என்கிட்ட முதலிலேயே சொல்லியிருந்தால் நான் வாங்காமலே இருந்திருப்பேன் அவ வாங்கிட்டா சரி கொடுக்க போனா அதையும் பிரச்சனை பண்றாங்க என்று சொல்லுகிறார். அவங்க நந்தினியை மதிக்க மாட்டேங்குறாங்க என்று சொல்ல, ஆமாண்டா இன்னைக்கு நந்தினி எவ்வளவு அந்த குடும்பத்துக்கு என்று நான் காற்றேன் என சூர்யா சொல்லுகிறார்.
மறுபக்கம் நந்தினி ரூமில் இருக்க மாதவி வந்து செல்லமாக நந்தினியிடம் பேசுகிறார். நீ எதுவும் மனசுல வச்சுக்காத நீ சீர்வரிசை தட்டில் ஒரு புடவெல்லாம் வச்சு கொடுக்கணும்னு வந்தீங்களே அந்த கலர் நல்லா இருந்தது என்று சொல்ல சரி பாக்குறீங்களா என்று கேட்க நந்தினி எடுத்துக்காட்டுகிறார். உடனே சூப்பரா இருக்கு செமையா இருக்கு என்று சொல்லி நான் இதுவே எடுத்துக்குறேன் என கேட்டேன் சரி எடுத்துக்கோங்க என சொல்ல மாதவி சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வர சுரேகா எதிரில் வந்து விடுகிறார். புடவைக்காக இப்படி சீப்பா நடந்துக்கிற இது மாதிரி பண்ணா அவ எப்படி உன்ன மதிப்பா என்று கேட்கிறார். நான் ஒன்னும் அதுக்காக வாங்கல இந்த புடவையை யாரும் கட்டலனா அவ கட்டிக்கிட்டு பணக்கார வாழ்க்கையே பழக ஆரம்பிச்சிடுவா அதனாலதான் என்று சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார்.
மறுபக்கம் காரில் சூர்யா குடித்துவிட்டு இறங்க மேலே இருந்து நந்தினி பார்க்கிறார். பிறகு காருடன் தனியாக பேசிக்கொண்டு இருக்க நந்தினி கவனித்து கோபப்படுகிறார். நான் அவ்வளவு சொல்லியும் நீங்க குடிச்சு இருக்கீங்களா நான் குடிக்க மாட்டேன்னு நெனச்சீங்களா நான் சொன்னதை செஞ்சு காட்டுறேன் அப்பதான் உங்களுக்கு புரியும் என சொல்லுகிறார். வீட்டுக்குள் வந்த சூர்யா இவங்க எல்லாரும் எதுக்கு டாடி ஒண்ணா உக்காந்து இருக்காங்க நந்தினியை எப்படி எல்லாம் பழி வாங்கலாம்னு யோசிக்கிறார்களா என்று சொன்னால் அதெல்லாம் இருக்கட்டும் இப்ப நீங்க எதுக்கு குடிச்சிருக்க என்று கேட்க எனக்கு மனசு கஷ்டமா இருக்கு டாடி என்று சொல்லுகிறார். நந்தினி யாரு டாடி அவ என் பொண்டாட்டி அவை யாரையும் பிரிக்க நினைக்கல, தீபாவளிக்கு இது மாதிரி அக்கா தங்கச்சிக்கு சீர் கொடுக்கணும்னு சொன்னாங்க அதனால தான் நான் வாங்கிட்டு வந்தேன் இந்தம்மா அதை ஏர்ல தூக்கி பறக்க விடுறாங்க கேட்டா அவளுக்கு தகுதி இல்லன்னு சொல்றாங்க என்று திட்டுகிறார்.
இனிமே அவ தோட்டத்துல வேலை செய்றவ கிடையாது லீகலா என்னோட பொண்டாட்டி அவளுக்கு இந்த வீட்டில் மதிப்பும் மரியாதையும் கொடுத்து தான் ஆக வேண்டும் ஆனா இத நீங்க யார் சொன்னாலும் கேக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அதனால இந்த வீட்டோட வரவு செலவு கணக்கு நந்தினி தான் பாப்பா உங்களை விட அவள் சிக்கனமா பண்ணுவா என்று சொல்ல மாதவி சுரேகா இருவரும் நீ சொல்றதெல்லாம் இங்க நடக்காது இந்த வீட்டுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி யாருக்கு யாரு கணக்கு கொடுக்கிறது அவளும் இந்த வீட்டுக்கு மகாராணி கிடையாது அவ இந்த வீட்டோட வேலைக்காரி அதுதான் அவளுடைய இடம் என்று சொல்லுகிறார். இந்த வீட்டை கணக்கு பாக்குறதுக்கு அவ யாரு என்று கேட்க திரும்பத் திரும்ப கேட்காதீங்க அவ என்னோட பொண்டாட்டி அவங்களுக்கு சொல்லி புரிய வைங்க டாடி என்று சொல்ல சரி நீ போய் படுடா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
நந்தினி பண்ண கொள்கைக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு என்று சொல்லி சரக்கு பாட்டிலை கையில் எடுக்கிறார். பிறகு திறக்க மீண்டும் வைத்துவிட்டு கருப்பன் போட்டோ முன் ஓடி வருகிறார் அவரை திருத்துறதுக்கு எனக்கு வேறு வழி தெரியல நான் என்ன பண்ணனும் நீ தான் சொல்லணும் எனக்கு தெரியாது நான் குடிக்கலாமா வேணாமா நீயே சொல்லு என்று சொல்லி திருவோலை சீட்டு எழுதி போடுகிறார். பிறகு சீதை பிரித்துப் பார்த்து நந்தினி கருப்பாயென பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுரேகா மாதவியிடம் அவ கிட்ட எதுக்கு போய் நிக்கிற அவ எப்படி உன்ன நாளைக்கு மதிப்பா என்று கேட்கிறார் மறுபக்கம் சூர்யா இந்த வீட்டோட வரவு செலவு கணக்கு இனிமே நந்தினி தான் பாப்பா என்று குடும்பத்தினரிடம் சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி குடித்துவிட்டு அலப்பறை செய்ய சூர்யா தூக்கிக்கொண்டு சென்று விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


