தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் விவேக் போதும்டா வந்துரு என்று சொல்ல 20 பேருக்கு சாப்பாடு வாங்குற அளவுக்கு காசு வர வரைக்கும் நான் பிச்சை எடுக்கத்தான் வேண்டும் என சொல்ல சுந்தரவல்லி குடும்பத்துடன் வந்து கோவிலில் இறங்குகிறார். உடனே இதை கவனித்த விவேக் சூர்யாவிடம் சொல்ல சரி நான் போய் ஏதாவது சமாளிக்கிறேன் என சுந்திரவல்லி இடம் வந்து பேச்சு கொடுத்து நம்ம வேற வழியில கோவிலுக்குள்ள போகலாம் என்று சொல்லி சமாளித்து ஒரு வழியாக அழைத்துச் செல்லும் போது சுரேகா கவனித்து விட்டு சுந்தரவல்லி இடம் காட்டுகிறார். அவர்களும் அதிர்ச்சியாகி பார்க்கின்றனர். இவன் எதுக்கு மா இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கேட்க அந்த தோட்டக்காரிக்கு உடம்பு முடியாம இருக்கா இல்ல அதனால தான் என்று சொல்ல அவளுக்காக இவன் ஏன் இப்படி பண்ணனும் என்று கேட்க அவன் தான் இப்போ புது ஆளா மாறி இருக்கானே என்று சொல்லுகிறார். அவன் கிட்ட யாரும் எதுவும் பேச வேணாம் நம்ம நேரா கோவிலுக்கு போயிடலாம் என்று சொல்லி வரும்போது சுந்தரவள்ளியின் புடவை ஒரு பிச்சைக்காரர் கை பட்டுவிட கோபப்பட்டு திட்டுகிறார்.
அவரும் பதிலுக்கு பிச்சை போடவில்லை என்றால் அமைதியா போக வேண்டியது தானே எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க என்று கேட்க நான் வந்து கவனிச்சுக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட மறுப்பக்கம் அருணாச்சலம் நந்தினியை பார்க்க வருகிறார். எப்படிமா இருக்கா என்று கேட்க எந்த முன்னேற்றமும் இல்லை சார் என்று சொல்ல என் புள்ள அங்க பிச்சை எடுக்கிறோம் என் மருமகள் இப்படி இருக்கா இந்த கடவுளுக்கு கண் இல்லையா இந்த குடும்பத்துக்கு இந்த அப்பாவி பிள்ளை என்ன தப்பு பண்ணுச்சு என்ற வருத்தப்பட நீங்க கவலைப்படாதீங்க சார் சூர்யா அண்ணா ஓட வேண்டுதல் கண்டிப்பா நந்தினி காப்பாற்றும் என சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி கோவில் நிர்வாகத்திடம் வந்து நடந்த விஷயத்தை சொல்ல இதுவரைக்கும் எதுவும் பிரச்சனை வந்ததில்லை என்று சொல்ல அப்போ நாங்க வேணும்னே சொல்றோமா என்று மாதவி கோபப்படுகிறார். இப்ப நீங்க என்ன பண்ணனும்னு சொல்றீங்க என்று கேட்க இந்த பிச்சைக்காரங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து ஆகணும் என்று சொல்ல அவர்களும் போலீசுக்கு போன் போடுகின்றனர்.
போலீஸ்காரர்கள் வந்த உடனே பிச்சைக்காரர்களை அடித்து துரத்துகின்றனர். ஒரு போலீஸ்காரர் சூர்யாவை அடிக்க வர தடுத்து நிறுத்துகிறார். இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் உங்கள் கிட்ட யாரோ பொய் கம்பளைண்ட் கொடுத்திருக்காங்க முதல்ல அவங்கள வர சொல்லுங்க நீங்க சொல்ற மாதிரி எதுவும் இங்க நடக்கல என்று பிச்சைக்காரர்களுக்கு ஆதரவாக பேசி அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார். மறுபக்கம் மாதவி நம்ம நினைப்பது நடக்குமா என்று கேட்க கண்டிப்பா நடக்கும் என சுந்தரவல்லி சொல்லுகிறார்.
உடனே போலீஸ்காரர் ஒருவர் வந்து சுந்தரவல்லி இடம் உங்களை வெளியில் கூப்பிடுகிறார் என்று சொல்லி கூப்பிட, உடனே மாதவி நீங்க பிச்சைக்காரர்களை துரத்த சொன்னா அவன் சும்மா இருக்க மாட்டான், அவன் நீங்க முன்னாடி போய் நின்னா உடனே உங்கள அம்மானு கூப்பிட்டு உங்களை அசிங்கப்படுத்துவான் உங்க பையன் நானு எல்லாரும் நினைப்பாங்க நம்ம இதை அவாய்ட் பண்ணிடலாம் என்று சுரேகா சொல்லுகிறார்.
உடனே சுந்தரவல்லி நான் கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்லி போலீஸ்காரரை அனுப்பி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா கோவிலில் அனைவரும் முன்னிலையில் ஹலோ மம்மி பதில் சொல்லுங்க என்று சொல்ல போலீஸ்காரர்கள் உங்க மம்மியா என்று கேட்க ஆமாம் என்று சூர்யா சொல்லுகிறார். வீட்டுக்கு வந்த சுந்தரவல்லி இடம் அவன் ஆசை பட்டு பண்ணல நேத்தி கடன் நான் தான் பண்றாங்க அதனால தான் என் மனச தேத்திக்கிட்டேன் என்று சொல்லுகிறார். அவ யாரு என் வீட்டு ராஜா அவன் போய் பிச்சை எடுக்கணுமா என்று சுந்தரவல்லி கோபப்பட இதையெல்லாம் கேட்டு நந்தினி கண் முழித்து கண்கலங்குகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
