தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி பண்ண கொள்கைக்காக என்னென்னல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு என்று சொல்லி சரக்கு பாட்டிலை கையில் எடுக்கிறார். பிறகு திறக்க மீண்டும் வைத்துவிட்டு கருப்பன் போட்டோ முன் ஓடி வருகிறார்.
அவரைத் திருத்தறதுக்கு எனக்கு வேற வழி தெரியல நான் என்ன பண்ணனும்னு நீ தான் சொல்லணும் எனக்கு தெரியாது நான் குடிக்கலாமா வேணான்னு நீயே சொல்லு என்று சொல்லி திருவோலை சீட்டு எழுதி போடுகிறார் அதில் என்ன வரப்போகிறது? நந்தினி என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
