சுந்தரவல்லி கேட்ட கேள்வி,சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சாமியார் அண்ணாமலையை பூஜை ரூமுக்கு அழைத்து சென்று சாமி கும்பிடுகிறார். அம்மா ரொம்ப உக்கரமா இருக்கா, அம்மா அந்த பொண்ண சுத்தி சுத்தி வறா என்னை மீறி நீ பொழச்சி வருவியான்னு பார்க்கலாம் என்று நினைக்கிற மாதிரி இருக்கு ஆத்தா வந்திருந்தா அவளுக்கு பொறுத்து போகணும் அவளை யாரும் சீண்டி பார்த்து இருக்காங்க, இதுக்கு என்னதான் பரிகாரம் என்று கேட்க, நந்தினி ஓட புருஷன் சூர்யா பிச்சை எடுக்கணும், அதுவும் கோவிலில் செய்யணும் இந்த வீட்ல இருக்கறவங்களோட அகங்காரம் குறைந்து நீ கோபத்தில் இருந்து வெளி வரணும்னு என்று வேண்டி அந்த காசில் 11 பேருக்கு அன்னதானம் செய்யணும் உங்க பையன் சூர்யா செய்வாரா என்று கேட்க சூர்யா கண்டிப்பா செய்வேன் என்று சொல்லி சூர்யா வருகிறார். இப்படி பண்ணா நந்தினிக்கு சரியாயிடுமா என்று கேட்க நல்லதே நடக்கும் கண்டிப்பா செய்யுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

சாமியார் சென்ற பிறகு அருணாச்சலம் உன்னால எப்படி சூர்யா இப்படி பண்ண முடியும் என்று கேட்க, விஜியும் இவர்கள் பேசுவதை கவனித்து விட்டு உங்களால எப்படி அண்ணா இப்படி பண்ண முடியும் என்று கேட்க நான் நந்தினிக்காக என்ன வேணா செய்வேன் இப்போதைக்கு அவள் படுற கஷ்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை என்று சொல்லுகிறார். நந்தினிக்காக இதை நான் செஞ்சுதான் ஆகணும் நம்ம வீட்ல இருக்கிறவங்க பண்ண வேலைக்கு நான் தான் பாவத்தை கழுவி ஆகணும் அவ பழைய மாதிரி ஆகணும் டாடி அவ்வளவுதான் அதுக்காக நான் யார் என்ன சொன்னாலும் செய்வேன் என சொல்லுகிறார். விஜியும் யாராக இருந்தாலும் இது மாதிரி ஒத்துக்க மாட்டாங்க அண்ணா என்று என்று சொல்ல, நந்தினிக்காக நான் இதை செய்ய தான் போறேன் என்று சொல்ல சரி நீ கோவிலுக்கு போய் பரிகாரத்தை பண்ணு சூர்யா என்று அருணாச்சலம் செல்லுகிறார்.

ஆனா ஒன்னு டாடி நீங்க மட்டும் அந்த கோவிலுக்கு வந்துறாதீங்க உங்களால அந்த கோலத்தில் என்னை பார்க்க முடியாது என்று சொல்ல அருணாச்சலம் கண்கலங்கி சூர்யாவை கட்டி பிடிக்கிறார். சூர்யாவும் கோவிலுக்கு விவேக் உடன் வந்து பிச்சை எடுக்க தயாராகிறார். விவேக் நீ உன்னோட பொண்டாட்டிக்காக செய்வதெல்லாம் சரி ஆனா ஒரு நண்பனா இதை என்னால ஏத்துக்கவே முடியலடா ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு என்று சொல்ல, ஒரு காலத்துல நான் யாருக்கும் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று இருந்தேன் ஆனால் நான் இப்படி இருக்கிறது எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு. என்னோட நந்தினிக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன் என அந்த சாமிக்கு தெரிய வைக்கணும் நீ வா என்று சொல்லி சாமி கும்பிட்டு விட்டு பிச்சை எடுக்கும் இடத்திற்கு சூர்யா வருகிறார். சூர்யாவை பார்த்தவுடன் அனைவரும் உங்கள மாதிரி கொடுக்கிற தர்ம பிரபுலா என்னைக்காவது தான் வருவாங்க நீங்க இன்னைக்கும் வந்து இருக்கீங்களே என்று சொல்ல சூர்யா பிச்சைக்காரர் ஒருவரை தள்ளி உட்கார சொல்லிவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து விடுகிறார். நேத்து 500, 1000 கொடுத்துவிட்டு இன்னைக்கு கூட சேர்ந்து பிச்சை எடுக்குறீங்க எங்களுக்கு புரியவே இல்லை என்று கேட்கிறார்.

உடனே சூர்யா நீங்க எல்லாரும் என்னைக் கேள்வி கேட்காதீர்கள், எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் நான் பிச்சை எடுத்துக்கிறேன் என்ற சூரியா சொல்லுகிறார். உடனே சூர்யா இங்கிலீஷில் ப்ளீஸ் மேம் ஹெல்ப் மேம் என்று கெஞ்சி பிச்சை கேட்க விவேக் வருத்தப்பட்டு பார்க்கிறார். அங்கு கண்ணு தெரியாமல் இருக்கும் ஒரு பெண் மேடம்னு சொன்னா யாரும் பிச்சை போட மாட்டாங்க அம்மா தாயேன்னு கேளுங்க என்று சொல்ல சரிமா தங்கச்சி என்று சொல்லுகிறார்.

கோவில் வாசலில் உட்கார்ந்து சூர்யா அம்மா தாயே பிச்ச போடுங்க என்று சொல்ல பக்கத்தில் இருக்கும் இரண்டு பிச்சைக்காரர்கள் இப்படி சொல்லக்கூடாது என்று இருவரும் எப்படி பிச்சை கேட்க வேண்டுமென சூர்யாவிற்கு சொல்லிக் கொடுக்கின்றனர். சூர்யாவும் அதே போல் செய்ய கோவிலில் இருந்து வெளியில் வந்த ஒருவரிடம் அனைவரும் பிச்சை கேட்க சூர்யாவும் கேட்கிறார் உடனே அவர் நீ பார்க்க நல்லா தான் இருக்க சூடு சொரணை எதுவும் இல்லையா உழைச்சி சாப்பிட மாட்டியா நோகாம ஒடம்பு வளக்குறியோ பிச்சை எடுக்கிறானா பிச்சை என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் இதனால் சூர்யாவின் முகம் மாறுகிறது. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் சிங்காரத்திடம் அவன் யாருக்காகவும் எதுக்காகவும் நின்னது கிடையாது ஆனா இப்போ நந்தினிக்காக எல்லார்கிட்டயும் கையேந்தி நிற்கிறான் என்று கண்கலங்கி அழுகிறார். அப்பாவும் பிள்ளையும் தான கூடி கூடி பேசிக்கிட்டே இருப்பீங்க அவனை எங்க காணோம் என்று சுந்தரவல்லி கேட்கிறார் மறுபக்கம் சூர்யா பிச்சை எடுக்கும் இடத்தில் பக்கத்தில் இருப்பவர்களிடம் என் பொண்டாட்டிக்கு அம்மா போட்டு இருக்கு அவளுக்கு சரியாக தான் நான் இப்படி வேண்டுதல் செய்வேன் என்று சொல்ல அந்த அளவுக்கு உனக்கு பொண்டாட்டி மேல பாசமா என்று பிச்சைக்காரர் ஒருவர் கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

காஞ்சனா பட நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து..வெளியான தகவல்.!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…

1 hour ago

பராசக்தி படம் குறித்து தரமான தகவலை பகிர்ந்த சுதா கொங்கரா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…

2 hours ago

எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு.!!

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…

6 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

24 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

24 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

24 hours ago