leader movie review
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு சர்வீஸ் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் அவரின் வாழ்க்கையில், ஒரு மர்மமான கண்டெய்னர் சம்பவம் திருப்புமுனையாகிறது. அந்த கண்டெய்னரில் சட்டவிரோதமாக ஏதோ முக்கியமான பொருள் இருப்பதாக போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியா சந்தேகிக்கிறார். அதை பற்றி தகவல் அறிய லெஜண்ட் சரவணனின் உதவியை நாடினாலும், அவர் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவிக்கிறார்.
ஆனால் சூழ்நிலை மாற, ஆண்ட்ரியா அவரை பயன்படுத்தி அந்த கண்டெய்னரில் உள்ள மர்மத்தையும், அதற்கு பின்னால் இருக்கும் பாகுபலி பிரபாகரனையும் வெளிக்கொணர்கிறார். தொடர்ந்து, அந்த கண்டெய்னரில் இருக்கும் பொருட்களை அழித்ததுடன், பாகுபலி பிரபாகரனை லெஜண்ட் சரவணன் கொலை செய்கிறார். இதனால், அந்த கண்டெய்னரின் உண்மையான உரிமையாளரான சந்தோஷ் பிரதாப், பழிவாங்கும் நோக்கில் லெஜண்ட் சரவணனை குறிவைக்கிறார்.
இறுதியில், சந்தோஷ் பிரதாப் தனது பழியை தீர்த்துக்கொண்டாரா? லெஜண்ட் சரவணன் உண்மையில் யார்? கண்டெய்னரில் இருந்த பொருட்களை அழிக்க அவர் எடுத்த முடிவின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக வரும் லெஜண்ட் சரவணன், தனது முந்தைய படத்தை விட இந்த படத்தில் கணிசமான முன்னேற்றத்தை காட்டியுள்ளார். மாஸ் காட்சிகள், ஆக்ஷன் சீன்கள், ஸ்டைல் ஆகியவற்றில் நன்றாக பொருந்தியுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் பகுதிகளில் கவனம் ஈர்க்கிறார். அதே நேரத்தில் எமோஷனல் காட்சிகளிலும் உணர்ச்சி பூர்வமான நடிப்பை வழங்கி உள்ளார்.
போலீஸ் அதிகாரியாக வரும் ஆண்ட்ரியா மற்றும் ஷாம் இருவரும் கதையின் ஓட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்துள்ளனர். நாயகியாக வரும் பயல் ராஜ்புத், அழகான தோற்றத்துடன் அளவான நடிப்பை வழங்கியுள்ளார். வில்லனாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப் தனது மிரட்டலான நடிப்பால் வித்தியாசத்தை உருவாக்குகிறார்.
இயக்குநர் துரை செந்தில்குமார், முழுக்க கமர்ஷியல் பாணியில் கதையை நகர்த்தியுள்ளார். ஆக்ஷன், சென்டிமெண்ட், மாஸ் டயலாக் ஆகியவற்றை சமநிலையுடன் இணைத்து, ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை கொண்டு செல்கிறார்.
டத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஆக்ஷன் காட்சிகளும், ஜிப்ரானின் பின்னணி இசையும் தான். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் மாஸ் பில்ட்அப்புகள் திரையில் ரசிக்க வைக்கின்றன. வெங்கடேஷின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja |…
KITTI Movie Teaser | #MurugaaASHOK as #AKB |Thirumaran | Nisha | Sangavi | Simuadvani
Chala Happy Nenu Lyrical Video Song (Tamil) | Beep Tamil Movie | L. Shanmuga Sundar…
Bethlehem Kudumba Unit Official Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju |…
Ennachu Lyrical Video | Magenta | Shanthnu | Vaaheesan | Dharan Kumar | Anjali |…
Jai Ho Lyrical Video | Operation Tral | Sudhir Yaduvanshi | Jayasurya | Ratheesh Vega