Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 15-02-26

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அனைவரும் காத்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி அருணாச்சலத்தை கட்டாயப்படுத்தி கேக் வெட்ட அழைத்து வருகிறார் வந்திருப்பவர்களும் இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருக்கும் கேக் வெட்டுங்க அருணாச்சலம் சார் என்று சொல்ல சுந்தரவல்லி அருணாச்சலத்தின் கையைப் பிடித்து கேக் வெட்ட வர அருணாச்சலம் தயங்குகிறார். மீண்டும் சுந்தரவல்லி அருணாச்சலம் கையைப் பிடித்து வெட்ட வர பட்டாசு வெடிக்கிறது. சூர்யா நந்தினி உடன் வருவதைப் பார்த்து அருணாச்சலம் சந்தோஷப்பட மற்றவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். நான் சொன்ன மாதிரியே நந்தினியை கூட்டிட்டு வந்துட்ட பாத்தீங்களா என்று சொல்ல அருணாச்சலம் சந்தோஷப்பட அவர்கள் ஆசீர்வாதம் வாங்குகின்றனர். பிறகு சூர்யாவும் அருணாச்சலமும் சேர்ந்து கேக் வெட்ட சுந்தரவல்லி கடுப்பாகிறார். மறுபக்கம் ரவுடி ஆட்களின் ஒருவர் போன் பண்ண பரமு எடுத்து பேசுகிறார். என்ன அவங்க கதைய முடிச்சிட்டீங்களா என்று கேட்க நாங்களே இப்ப போலீசுக்கு பயந்து இருக்கோம் என்று நடந்த விஷயத்தை சொல்லுகிறார். ஒரு பொட்டச்சியை கடத்தி வச்சிக்க தெரியல இதுக்கு மேல உங்கள நம்புவது வேஸ்ட் வைங்க என சொல்லி போனை வைத்து விடுகிறார். சூர்யாவும் நந்தினியும் அருணாச்சலத்திடம் சொல்லுகின்றனர். அப்போது நந்தினி என் கண்ணு முன்னாடியே ஒரு பொண்ணு துடிதுடிக்க இறந்து போன ஆனா அவளை என்னால காப்பாத்த முடியல என்று கண்கலங்க உன்னால என்ன பண்ண முடியும் நந்தினி என்ற சூர்யா கேட்கிறார். அதுவும் இல்லாம அவங்க ஒரு பெரிய நெட்வொர்க் வெட்சி போத பொருள் கடத்திக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகின்றனர். நந்தினி இல்லாம என்னால ஃபங்ஷன்ல சந்தோஷமாக இருக்க முடியல என்று சொல்ல உங்களால எப்படி இருக்க முடியும் என்று சுந்தரவல்லி கோபமாக கேட்கிறார்.

வந்தவங்க எல்லாரும் அப்செட் ஆகி போனதுதான் மிச்சம் இவ காணாம போறது என புதுசா என்று சொல்ல சூர்யா கோபப்படுகிறார். இவ ஏதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டே இருப்பா. யாராவது கடத்திட்டு போவாங்க ஊர் உலகத்துல என்ன பொம்பளைங்க இல்லாமையா இருக்காங்க நீங்க ரெண்டு பேரும் இன்னொன்னு பண்ணுங்க வீட்டுல ஒரு போலீஸ் ஸ்டேஷன் வச்சுக்கிட்டு இங்கேயே கம்ப்ளைன்ட் கொடுத்துகிட்டு இருங்க என்று சொல்ல சூர்யா நந்தினி எவ்வளவு பெரிய டேஞ்சரஸ் சுச்சுவேஷன்ல இருந்தா தெரியுமா அவங்கள மனசாட்சியோட பேச சொல்லுங்க என்று சொல்லுகிறார் உடனே சுந்தரவல்லியை திட்டி விட்டு நந்தினியை அழைத்துச் சென்று விடுகிறார். கருப்பசாமிக்கு விளக்கேற்றி காப்பாற்றியதற்கு நன்றி சொல்ல, சூர்யா பின்னால் வந்து நின்ற வேறேதும் வரம் வேண்டுமா என்று கேட்கிறார். நான் உயிரோட வரமாட்டேன்னு நினைச்சேன் அந்த பொண்ணு துடி துடிச்சு சாகுறத எல்லோரும் என்ன பார்த்து சிரிக்கிறாங்க என்று சொல்ல, சூர்யா அவர்களை கைய கால ஒடச்சி இருக்கணும் அதுக்குள்ள போலீஸ் வந்துடுச்சு என்று சொல்லுகிறார். நான் என்ன தப்பு பண்ணேன் என்று சூர்யா சொல்ல எனக்கும் அது தான் சந்தேகமா இருக்கு இவங்களுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க என்று சொல்லுகிறார் ஒருவேளை நான் அங்க வராம போயிருந்தா என்ன பண்ணி இருப்ப என்று சொல்ல கண்டிப்பா வந்து இருக்கீங்க நான் ரெண்டு பேரும் நம்புறேன் ஒன்னு கருப்பசாமி இன்னொன்னு சூர்யா சார் என்று சொல்ல சூர்யா கண் கலங்குகிறார்.

உடனே நந்தினி நான் செத்துப் போயிருந்த என்ன பண்ணி இருப்பிங்க என்று பேச எதுக்காக இப்படி பேசுற நந்தினி என்று சூர்யா சொல்ல உடனே நான் ஒரு பேச்சுக்கு சொல்றேன் என்று சூர்யா பேச வர உடனே வாயை அடைத்து விடுகிறார். நந்தினி வெட்கப்பட சூர்யா சிரிக்கிறார். பிறகு இருவரும் படுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொள்கின்றனர். மறுநாள் காலையில் மாதவி இப்போ அவளை எப்படி என் கால கழுவ வைக்கிறேன் பாரு என்று சொல்லி நந்தினியை கூப்பிட்டு என் பாதத்தில் கொஞ்சம் பிரச்சனை இருக்கு ஊருக்கு வந்தபோது நீயும் உன் தங்கச்சியும் கால கழுவி சுத்தம் பண்ண நீங்க இல்ல அது நல்லா இருந்துச்சு அது மாதிரி பண்ணிவிடு என்று சொல்லுகிறார். நந்தினி தயங்க, என்னாச்சு என்று கேட்கிறார் சூர்யா சார் பார்த்தா பிரச்சனை ஆகிடும் என்று சொல்ல அதுதான் வெளியே போயிட்டால்ல நீ பண்ணி விடு என்று சொல்ல நந்தினியும் உட்கார்ந்து மாதவியின் காலை சுத்தம் செய்கிறார். சூப்பரா பண்றாளே நான் கூட உனக்கு முடிஞ்சதும் பண்ணிக்கிறேன் என்று சொல்ல, நந்தினி பண்ணி விடுகிறேன் என சொல்லுகிறார். அசோகன் வந்து பார்த்துக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் சூர்யா வந்து பார்த்து நந்தினியை எழுப்புகிறார். உடனே உன் காலை கழுவ தான் என் பொண்டாட்டி இருக்காளா என்று கோபப்படுகிறார். உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் பொண்டாட்டிய செய்ய சொல்லுவ உன் கிட்ட என்ன பணமா இல்ல வெளியே போய் பண்ண வேண்டியதுதானே உனக்கு இதனால என்ன நோக்கம் என்று கேட்கிறார். உடனே நந்தினி இடம் அவ கால கழுவ சொன்னா உடனே நீ கழுவியா உனக்கு அசிங்க படுத்துறாங்கன்னு தெரியலையா என்று சொல்லுகிறார். அசோகன் இதுக்கு ஏன் மாப்பிள்ளை இவ்வளவு கோவப்படுற ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்றது தானே என்று சொல்ல உடனே சூர்யா கரெக்ட் மாத்தி மாத்தி பண்ணிக்கிறது தானே என்று சொல்லிவிட்டு அப்போ மாதவிக்கு நந்தினி பெடிக்யூர் பண்ணால இப்போ மாதவி நந்தினிக்கு பண்ணட்டும் என்று சொல்ல மாதவி அதிர்ச்சி அடைகிறார்.

சூர்யா நந்தினியை உட்கார சொல்ல, நந்தினி உட்கார மறுக்க சூர்யா கட்டாயப்படுத்தி உட்கார வைத்து மாதவியை கீழே உட்கார வைக்கிறார். சுரேகா கோபப்பட ஒரு காலுக்கு உங்க அக்கா பண்ணுவா இன்னொரு கால நீ தான் பண்ணனும் என்று சொல்லுகிறார். மாதவி அழுது கொண்டே நந்தினியின் காலை சுத்தம் செய்கிறார். நீ சுத்தம் பண்ணிக்கிட்டு இரு நான் வந்து பாப்பேன் என்று சொல்லி நந்தினி இடம் இதுக்கு மேல யார் என்ன வேலை செஞ்சாலும் நீ செய் பதிலுக்கு அவங்களும் உனக்கு செய்யணும் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். நந்தினி வேண்டாம் என்று காலை எடுத்து விட மாதவி அழுது கொண்டே சென்று விடுகிறார். சுரேகா சுந்தரவல்லி இடம் வந்து மாதவி நந்தினிக்கு பெடிக்யூர் பண்ண விஷயத்தை சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகிறார். மாதவி ரூமில் அழுது கொண்டிருக்க அசோகன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் உனக்கு பண்ணி விட்டு இருப்பேன் எனக்கு அத விட்டா வேற என்ன வேலை என்று சொல்லுகிறார் என் கோபத்தை கிளப்பாதீங்க என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி மாதவிடம் வர இனிமேல் நான் இந்த வீட்ல எப்படி இருப்பேன் அவ என்ன எவ்வளவு நக்கலா பார்த்து சிரிப்பா எனக்கும் என் புருஷனுக்கும் வேற வீடு பார்த்து கொடுத்துடுங்க நாங்க போயிடுவோம் என்று சொன்னால் இந்த வீட்டை விட்டு நீ போகக்கூடாது அவ தான் போகணும் என்று சொல்லுகிறார். அனைய போற விளக்கு பிரகாசமாக தான் எரியும். அவளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் பரமு மற்றும் அவரது அண்ணனும் அந்த நந்தினி எப்படியாவது முடிக்கலாம்னு பார்த்தா முடியாம போயிடுச்சு என்று சொல்ல, பரமு அடியாளுக்கு போன் போட்டு போலீஸ்ல மாட்டக்கூடாது அப்படியே மாட்னாலும் இதுக்கு பின்னாடி நான் தான் இருக்கேன்னு சொல்லக்கூடாது அப்படி சொன்னா உன் உயிர் இருக்காது என்று சொல்லுகிறார். நான் ஒரு வக்கீல் ஏற்பாடு பண்ணி இருக்கேன் அவர் சொல்றத மட்டும் நீ செய் என்று சொல்லுகிறார். சிங்கத்தை வேட்டையாட நரி கிட்ட சொன்னா எப்படிமா என்ற சொல்லுகிறார். என் புருஷனை ஜெயில்ல போட்டு இருக்காங்க அந்தக் குடும்பத்தை நான் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல இப்ப எங்க போறோம் என்று சொல்ல பங்காளி சுந்தரவல்லி வீட்டுக்குத்தான் அந்த குடும்பத்தை அழித்தாக வேண்டும் என்று சொல்ல கண்டிப்பா பண்ணிடுவோம் என இருவரும் சந்தோஷமாக சிரித்துக் கொள்கின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி வீட்டுக்கு கெஸ்ட் வர சுந்தரவல்லி ரொம்ப சந்தோஷப்பட்டு பேசுகிறார் உள்ளே வரவைத்து அவர்களிடம் பேசிக்கொண்டு குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைக்க சுந்தரவல்லி நந்தினியை பார்த்து இவ நம்ம தோட்டத்துல வேலை செஞ்ச சிங்காரம் என ஆரம்பிக்க உடனே சூர்யா இவை என்னோட வைஃப் நந்தினி ஏ ஆர் குரூப் ஆஃப் கம்பெனியோட சிஇஓ என்று சொல்ல சுந்தரவள்ளியின் முகம் மாறுகிறது.

மறுபக்கம் பரமுவும் அவரது அண்ணனும் ஆப்பிள் பொக்கே எடுத்துக்கொண்டு சுந்தர்வள்ளி வீட்டுக்கு வருகின்றனர் இவங்களுக்கு கொடுக்குறதுக்கு அம்மா இவ்வளவு ஆப்பிள் வாங்கினேன் என்று சொல்ல அதில் ஊசி மூலம் மருந்து ஏற்றுகிறார். இந்த குடும்பத்தை கெடுக்குறதுக்காக தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார்.என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 15-02-26