moondru mudichu serial promo update 13-11-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் கல்யாணம் மற்றும் நந்தினியின் போனை சுந்தரவல்லி வாங்கி வைத்துவிட்டு கல்யாணத்திடம் மேல போயி உங்க சின்னையாவோட சம்பந்தம் இல்லாத ஆளோட துணிமணி எல்லாம் இருக்கு எல்லாத்தையும் போட்டு எடுத்துட்டு வா மொத்தமா அனுப்பி விடலாம் என சொல்லி அனுப்புகிறார். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணு நீ அடிப்ப என் மேல இருக்கிற மரியாதை போயிடுச்சா என்று கேட்க அப்படியெல்லாம் எதுவும் இல்லை என நந்தினி சொல்லுகிறார். இப்பவே இந்த நிமிஷமே என் பொண்ணு கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல, நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் நான் எந்த தப்பும் பண்ணல இவங்க ரெண்டு பேரும் தான் எல்லா தப்பும் பண்ணாங்க அப்படியும் மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சீங்கன்னா நான் கிடையாது இவங்க தான் உங்ககிட்டையும் சூர்யா சார் கிட்டயும் மன்னிப்பு கேக்கணும் என்று சொல்ல, மாதவி சுந்தரவல்லியை ஏத்தி விடுகிறார். உடனே சுந்தரவல்லி நந்தினியை வெளியில் இழுத்து வந்து தள்ளி விடுகிறார்.
உடனே வெளியில் வந்த நந்தினி நான் எதுக்கு வெளியே போகணும், நீங்க கட்டியிருக்கிற தாலிக்கு எல்லாம் ஒரு மதிப்பு இருக்குதுன்னா சூர்யா சார் கட்டின இந்த தாலிக்கும் அது பொருந்தும். நான் எங்கேயும் போக மாட்டேன் சூர்யா சாருக்கு உடம்பு சரி ஆகுற வரைக்கும் நான் இங்கேதான் இருப்பேன் என்று சொல்லி கீழே உட்கார்ந்து விடுகிறார். உடனே சுரேகா கொஞ்ச நாளாவே இவ ஆக்டிவிட்டீஸ் சரியில்ல என்று சொல்ல, மாதவி சுந்தரவல்லியை அழைத்துக் கொண்டு உள்ளே போகிறார். இந்த நேரத்தில் அவ வீட்டை விட்டு வெளியே போனால் நம்மளுக்கு தான் ஆபத்து என்று சொல்லுகிறார். உனக்கு என்ன இப்போ பிரச்சனை என்று கேட்க அவ சொன்னதை கவனிச்சீங்க இல்ல இப்ப அனுப்ப வேண்டாம் என்று சொல்லுகிறார். அவளுக்கு எதுக்கு நம்ம பயப்படனும் என்று கேட்கிறார். உடனே இவ இப்படியே போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா மீடியாவுல தெரிஞ்சு பிரச்சனை ஆகிடும் இப்போதைக்கு நம்ம சூர்யாவ பாக்க விடாம அவளை பண்ணனும் சூர்யா மனசுல அவ இங்க இல்லன்னு நம்ப வைக்கணும் என்று சொல்லுகிறார்.
அவன் நம்ம கண்ணு முன்னாடி இருக்கிறது தான் நம்மளுக்கு நல்லது என்று சொல்ல சுந்தரவல்லி அமைதியாக சென்று விடுகிறார். பிறகு மாதவி மேலே வந்து சூர்யா ரூம் வாசலில் படுக்கையை போட்டுவிட்டு அசோகனை படுக்கச் சொல்லி விட்டு சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் அசோகன் தூங்கி விட சூர்யாவுக்கு மயக்கம் தெளிந்து எழுந்திருக்க முயற்சி செய்து வலியில் இருக்க நந்தினி,நந்தினி என கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். சத்தம் கேட்டு வந்த அசோகன் பயப்படாத மாப்பிள நான் இருக்கேன் என்று சொல்லியும் சூர்யா நந்தினியை கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். உடனே அசோகன் மாதவியை கூப்பிட சுரேகாவும் வந்து எதுக்கு கத்திக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். உங்க தம்பி கண்ணை முடிச்சு நந்தினி கூப்பிட்டு இருக்கான் என்று சொல்ல சரி வாங்க என்று உள்ளே வருகின்றனர்.
சூர்யா கண் விழித்து நந்தினி நந்தினி என கூப்பிட்டுக் கொண்டே இருக்க மாதவி அவ இங்க இல்ல நாங்க தான் உன்ன பாத்துட்டு இருக்கோம் என்று சொல்லுகிறார் அதையும் மீறி நந்தினி என கூப்பிட்டுக் கொண்டே இருக்க அவ எங்க கூட எல்லாம் சண்டை போட்டுட்டு இந்த வீட்டுக்கே வர மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா என்று சொல்ல அவ அப்படி சொல்லி இருக்க மாட்டா என்று சொல்லுகிறார். மீண்டும் நந்தினியை கூப்பிட சூர்யா இப்படி இருக்கான்னு சொல்லி கூட பார்த்துக்கோ கூப்பிட்டோம் அப்ப கூட அவ வரல நாங்க சொல்றத நம்பு என்று சொல்ல உடனே போன் பண்ண முயற்சி செய்கிறார் உடனே அசோகன் போன் போட்டு ஸ்பீக்கரில் போட எடுக்காமல் இருக்க சூர்யா டாடி டாடி என புலம்புகிறார். உனக்கு அடிபடுறதுக்கு முன்னாடி ஒரு மீட்டிங் இருந்துச்சில்ல அதுக்காக போயிருக்காரு நீ அமைதியா படு என்று மாதவி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அவங்க வீட்டை விட்டு துரத்தலாம் ஆனா என் மனசுல இருந்து சூர்யா சாரா துரத்த முடியாது என்று சொல்லுகிறார். சூர்யாவை எப்படி கவனிச்சுக்கணும்னு எங்களுக்கு தெரியும் அதுக்கு தான் நாங்க இத்தனை பேர் வீட்ல காவல் இருக்கும் என்று மாதவியின் நந்தினி இடம் சொல்ல மறுப்பக்கம் சூர்யா நந்தினி என கூப்பிடுகிறார் சூர்யா கூப்பிடும் சத்தத்தை கேட்டு நந்தினி வீட்டுக்குள் ஓடி வர சுந்தரவல்லி இருப்பதை பார்த்து அமைதியாக நிற்கிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Unakku Onnu Song ,Iravin Vizhigal , Mahendraa, Neema Ray , Vijayasri , A.M. Asar …
ஸ்ட்ராபெரி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Rajini Gaang - Official Trailer | Rajini Kiishen | Dwiwika | M. Ramesh Baarathi |…