Moondru Mudichu Serial Promo Update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சிங்காரம் மினிஸ்டரின் கையைப் பிடித்து இவ்வளவு பெரிய கல்யாணத்துல சம்பந்த கலக்காம பண்றது தப்பு ஐயா என்று பேச அவரை மினிஸ்டர் அறைந்து கீழே தள்ளி விடுகிறார். உடனே நந்தினி வந்து தாங்கி பிடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் மினிஸ்டரும் மனைவியும் சிங்காரத்தை திட்ட உடனே மாதவி இப்ப எதுக்கு அவர அடிச்சீங்க என்று சிங்காரத்திற்கு ஆதரவாக பேசுகிறார். அவர் என்ன தப்பு சொல்லிட்டாரு சம்பந்த கலக்குறத பத்திதான சொன்னாரு , என்று மாதவி மினிஸ்டரிடம் சண்டை போடுகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மினிஸ்டர் மனைவி நானும் பொறுமையா இருக்கணும்னு பார்த்தா ஓவரா பேசிக்கிட்டு இருக்கீங்க அவரு எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.
அதற்கு உடனே மாதவி வேலை செய்றவங்க எல்லாம் எங்க வீட்ல ஒருத்தரா தான் நாங்க நினைச்சுக்கிட்டு இருக்கோம் அவங்க எங்களோட கெஸ்ட் நீங்க அவங்கள அவமானப்படுத்தினா நாங்க பார்த்துகிட்டு சும்மா இருப்போமா என்று கேட்க நந்தினி மினிஸ்டரிடம் மன்னித்துவிடுங்கள் ஐயா என்று கையெழுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறார் மாதவி நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற போ என்று ஓரம் தள்ள சிங்காரமும் இதெல்லாம் ஒன்னும் நான் தப்பா எடுத்துக்கலாமா என்று மாதவியிடம் சொல்ல,உடனே மினிஸ்டர் மனைவி ஓ நீ தப்பா வேற எடுத்துப்பியா என்று சிங்காரத்திடம் கேட்கிறார். உடனே மாதவி நீங்களே இப்படி இருந்தா உங்க பொண்ணு எப்படி மரியாதை கொடுப்பா இதுதான் பொண்ண வளர்த்து இருக்கிறது என்று பேச உடனே மினிஸ்டர் மனைவி ஒரு பெரியவங்கள முன்னாடி எப்படி பேசணும் தெரியல உங்களை உங்க அம்மா இப்படித்தான் வளர்த்தாங்களா என்று மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
இதனை கவனித்த அருணாச்சலம் மற்றும் சுந்தரவல்லி கீழே இறங்கி வந்து நடந்த பிரச்சனையை பற்றி கேட்கின்றனர். அதற்கு சுந்தரவல்லி மாதவியைத் திட்டி அவங்க நம்மளோட சம்பந்தி அவங்க போய் இந்த வேலைக்காரங்க கிட்ட மன்னிப்பு கேட்கணுமா வாய மூடு மாதவி என்று மாதவியை அடக்குகிறார். ஆயிரம் தான் இருந்தாலும் தப்பு பண்ணுனா தப்புனு தானே சொல்லுவாங்க என்று சொல்ல அருணாச்சலம் எங்ககிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல சம்மந்தி என்று கேட்கிறார். உடனே சுந்தரவல்லி சம்பந்தம் கலக்குறத பத்தி நாங்க பேசலாம். நீ யாரு பேசுறதுக்கு என்று சிங்காரத்தை திட்டுகிறார். அந்த நேரம் பார்த்து சுதாகர் வந்து அண்ணியாரே நீங்க பண்ண வீட்ட பாத்துக்க சொன்னதை இவங்களே ஓனரா நினைச்சுக்கிட்டு பேசிகிட்டு இருக்கீங்க விட்டிருந்தா மினிஸ்டருக்கு பையன் இருந்தால் அவன் பொண்ணுக்கு சம்பந்தமே பேசியிருப்பார் என்று இன்னும் வெறுப்பேற்றுகிறார்.
உடனே சூர்யா இதை கவனித்து கீழே இறங்க அர்ச்சனாவும் கீழே இறங்கி வருகிறார். சூர்யா எதுவும் தெரியாமல் என் மாமாவை மன்னிப்பு கேட்க சொல்றியா அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என் பொண்டாட்டியோட அப்பா என்று சொல்லிவிட்டு மாதவியிடம் மினிஸ்டரிடம் மன்னிப்பு கேட்க சொல்லுகிறார். முதலில் மாதவி கேட்க மறுக்க பிறகு மன்னிப்பு கேட்கிறார் உனக்கென தனியா சொல்லனுமா என்று சுரேகாவை கேட்க சுரேகாவும் சாரி என்று சொல்லுகிறார். சூர்யாவும் மினிஸ்டரிடம் மன்னிப்பு கேட்கிறார். சூர்யாவிடம் அர்ச்சனா ரொம்ப தேங்க்ஸ் சூர்யா எங்க அப்பாக்கு ஒரு பிரச்சனை என்று தெரிந்தவுடன் சப்போர்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு என் மேல எவ்வளவு பாசம் இருந்தா இப்படி நடந்துப்ப ஐ லவ் யூ சூர்யா என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா பிரச்சனை தான் சால்வ் ஆயிடுச்சில்ல கெளம்புங்க கெளம்புங்க என்று கூட்டத்தை கலைத்து விடுகிறார். சுந்தரவல்லி சிங்காரம் மற்றும் நந்தினி இடம் இங்கே நின்று தொலைச்சிடுவேன் கிளம்புங்க என்று மிரட்டுகிறார். அவங்க கல்யாணம் முடிச்சு நாளைக்கு கிளம்பிடுவாங்க வா போலாம் என்று சுந்தரவல்லியை சமாதானப்படுத்திக் கூட்டி செல்கிறார்.
பிறகு சுந்தரவல்லி தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்க அருணாச்சலம் அங்கு வந்து சூர்யாவை பத்தி பயந்துகிட்டு இருந்தோம் ஆனால் அப்படியே மாறிட்டான் இல்ல மாமனார் பொண்டாட்டின்னு இருக்குறத பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு என்று சொன்னால் சுந்தரவல்லி அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு அவன் நார்மலா கோபத்தை காட்டி இருந்தா கூட நான் நம்பியிருப்பேன். ஆனால் இப்படி இருக்கவே தான் எனக்கு சந்தேகம் அதிகம் ஆகுது. என்று சொல்ல அருணாச்சலம் இது நம்மளோட குலதெய்வம் கருப்பசாமி நடத்தி வைக்கிற கல்யாணம் மனசுல எந்த ஊரு கவலையோ வச்சுக்கிட்டு நடத்த வேணா என்று சுந்தரவல்லிக்கு ஆறுதல் சொல்கிறார்.
அந்த நேரம் பார்த்து மாதவியின் கணவர் வந்து அத்தை பவுன்சர்ஸ் எல்லாம் அனுப்பிடலாமா என்று கேட்க எதுக்கு என்று சுந்தரவல்லி கேட்கிறார் அதுதான் கல்யாணத்துல சூர்யா ஸ்ட்ராங்கா இருக்கானே என்று சொல்ல உடனே சுந்தரவல்லி சிரித்துவிட்டு இதுக்கு அப்புறம் தான் ரொம்ப உஷாரா இருக்கணும் மண்டபத்தோட எல்லா மூலையிலும் ஆள் இருக்கணும் நைட்டு தூங்காம பார்த்துக்கணும் சின்ன கேப்ல கூட சூர்யா மண்டபத்தை விட்டு வெளியே போய்ட கூடாது என்று மாதவியின் கணவரிடம் சொல்லி அலர்ட் செய்கிறார். எதுக்கு அத்தை என்றெல்லாம் கேட்க சொன்னதை மட்டும் செய்யுங்க கிளம்புங்க என்று சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார்.
சிங்காரத்திடம் நந்தினி எதுக்குபா இத போய் கேட்ட என்று சிங்காரத்திடம் கேட்க,அதற்கு நான் எதுவும் சொல்லலாமா சின்னம்மாவும் பெரியம்மாவும் தான் நீங்க போய் சொல்லுங்க என்று சொன்னவுடன் நான் போய் சொன்னதுக்கு அப்புறம் ஒதுங்கி நின்னுட்டாங்க. அதற்கு நந்தினி நாங்க சொல்லி தான் அவர் சொன்னார் என்பதை வாய் திறந்து சொன்னாங்களா பாத்தீங்களா? எதுக்குப்பா நம்பளுக்கு இந்த வேலை, ஏற்கனவே நானு கல்யாணம் புடவை எடுக்கிற விஷயத்துல அதிக பிரசங்கித்தனமா பண்ணிட்டேன். இதுவும் அதிக பிரசங்கித்தனமா தான் இருக்கு நம்ம இங்க வேலை செய்யதான்பா வந்து இருக்கோம் அதை மட்டும் பண்ணிட்டு போயிடலாம். உடனே சிங்காரம் நான் சின்னையா நல்லதுக்கு தான்மா சொன்னேன் என்று சொல்ல நம்ம வேலை செய்றவங்கப்பா நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச உடனே மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு நம்ம ஊருக்கு போயிட்டு நம்ம வேலையை பார்க்கலாம் நம்ம இடத்துல இருந்தா தான் நம்மளுக்கு மதிப்பு என்று நந்தினி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் சூர்யாவை எங்கேயாவது பார்த்தீர்களா?என்று சுரேகா மற்றும் மாதவியிடம் சுந்தரவல்லி கேட்கிறார். உடனே சுரேகா அண்ணன் இந்த மண்டபத்தை விட்டு ஓடி போய்ட்டானா என்று கேட்கிறார்.
பிறகு நந்தினியிடம் சென்று உன் மேலையும் உங்கப்பன் மேலயும் கொலை வெறில இருக்கேன் ஒழுங்கா உண்மையை சொல்லிடு என்று மிரட்டுகிறார். என்கிட்ட போனு குடுத்துட்டு ரூமுக்கு தான் போனாரு என்று நந்தினி சொல்லுகிறார். உடனே சிங்காரம் அவருக்கு இந்த கல்யாணத்துல விருப்ப இல்லையா என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…