Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கல்யாணத்திற்கு விழுந்த அடி, சுரேகா சொன்ன ஐடியா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 02-08-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் பிசினஸ் நல்லபடியாக முடிய ஆபிசிலிருந்து அனைவரும் கிளம்ப சுந்தரவல்லி தக்காளி சட்னி அரைக்கிறவளுக்கு பிசினஸ் என்றால் என்ன தெரியுமா? ராஜா வேஷம் போட்டால் ராஜாவாக இருக்க முடியாது ராஜாவாக வாழ்ந்து காட்டணும் என்ன வெறுப்பேத்த பொண்டாட்டிங்கிற தகுதி கொடுத்த அவளை இங்க உட்கார வச்சிருக்க, உன்கிட்ட நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அந்த பெரிய மனுஷங்க ஒரு நாள்ல நேரத்தை எப்படி சமாளிக்கிறீங்கன்னு கேட்டாங்களே அதுக்கு பதில் சொல்ல முடிந்ததா? நான் உனக்கு சவால் விடுறேன் பத்து நாள் நான் இந்த கம்பெனி பக்கம் வரல பதினோராவது நாள் எல்லாரும் தல மேல தூண்டு போட்டுக்கிட்டு தான் போகணும் என்று சொல்லி கோபப்படுகிறார். உடனே நந்தினி இடம் வந்து உன் தகுதி என்ன உன் நிலைமை என்னன்னு உனக்கு தெரியாதா திரும்பத் திரும்ப சொல்றேன் உசுர உசுர பறந்தாலும் பருந்தாக முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

காரில் போய்க்கொண்டிருக்க அருணாச்சலம் உன்னை நீயே எதுக்கு அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்க என்று கேட்க அவன் பண்ணதெல்லாம் உங்களுக்கு தப்பா தெரியலையா என்று கேட்கிறார். என்னைக்குமே நான் நந்தினியை மருமகளா ஏத்துக்க மாட்டேன் என்று சொல்ல அருணாச்சலம் சிரிக்கிறார் என்ன சிரிக்கிறீங்க என்று கேட்க இந்த சிரிப்பு அர்த்தம் உனக்கு அப்புறம் தெரியும் என சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி சூர்யாவிடம் இதுக்காக தான் என்ன கம்பெனிக்கு கூட்டிட்டு போனீங்களா என்று கேட்கிறார். காரணமாதா இதுக்கு மேல உன்னை யாரும் வேலை செய்றவங்க வேலைக்காரின்னு சொல்ல முடியாதுல்ல என்று சொல்லுகிறார். நீ எந்த ஸ்கூல்ல படிச்ச எவ்வளவு படிச்சிருக்க என்று கேட்க பிளஸ் டூ பெயில் ஆயிட்டேன்னு சொல்லுகிறார். எத்தனை சப்ஜெக்ட்ல பாஸ் ஆன என்று கேட்க ஒரு சப்ஜெக்ட்ல மட்டும்தான் ஃபெயில் அதுவும் இங்கிலீஷ்ல சொல்லுகிறார்.

ஏன் இங்கிலீஷ் எக்ஸாம் படிக்கலையா என்று கேட்க எங்க வீட்ல ஒரு பசு மாடு இருந்தது அந்த மாடு கண்ணு போடுற வலியில கத்துக்கிட்டே இருந்தது அதனால எனக்கு அதோட வலி விட படிப்பு தெரியல அதனால அதை விட்டுட்டு போக முடியல என்று சொல்லுகிறார். அதுக்கப்புறம் ஏன் படிக்கல என்று கேட்க தங்கச்சியும் எல்லாம் வளர்ந்துட்டாங்க அவங்கள பார்த்துகிட்டு அப்படி விட்டுட்டேன் என்று சொல்லுகிறார். இங்கிலீஷ் படிக்க தெரியும் இல்ல அப்போ என்று கேட்க, தெரியாது சார் எனக்கு ஏபிசிடி தெரியும் என்று சொல்ல சரி சொல்லு என்று சொல்ல நந்தினியும் குழந்தை போல ஏபிசிடி சொல்ல சூர்யா சிரிக்கிறார் சரி ஓகே என சொல்லுகிறார். சுந்தரவல்லி கோபமாக வந்து உட்கார மாதவி என்னாச்சும்மா என்று கேட்க அந்த வேலைக்காரி எனக்கு ஈக்குவலா கையெழுத்து போடுற அதை நான் பார்த்து சும்மா இருந்தேன் என்று சொல்லுகிறார்.

வீட்ல டாக்குமெண்ட்ல கையெழுத்து போட சொன்னா சூர்யா சொல்லாம போட மாட்டேன்னு சொன்னா என்று சொல்ல அது எப்படி போடுவார் ரெண்டு பேரும் சப்போர்ட் பண்றாங்க இல்ல என்று சொல்லுகிறார். எனக்கு இதையெல்லாம் பார்க்க ரொம்ப பயமா இருக்கு என்று மாதவி சொல்லுகிறார். அவங்க ரெண்டு வார்த்தை இங்கிலீஷ்ல பேசணும்னு பயந்து நடுங்கற என்று சொல்ல இதுக்கு அப்புறம் நீங்க ரொம்ப சிந்திக்கனுமா சூர்யா அவளை கொஞ்ச நாளா ஒரு உயரமான இடத்துல வச்சு இருக்கான் அவன் எல்லாரும் முன்னாடியும் நந்தினி வேலைக்காரி தாண்டி அவன் பொண்டாட்டியா காட்டுறான்னு சொல்லுகிறார். இப்படியே அவ டெய்லியும் கம்பெனிக்கு போனா அவளை முதலாளி அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க அவ முதலாளினா அப்ப நீ யாருமா இதை முதலிலேயே நிறுத்தனும் இல்லனா நம்மளுக்கே வில்லங்கம் ஆயிடும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். பிறகு நந்தினி, சூர்யாவும் காரில் வந்து இறங்குவதைப் பார்த்து மாதவி வந்து மீண்டும் பேசிக் கொண்டிருக்க சூர்யா உள்ளே வந்து அருணாச்சலத்தை கூப்பிடுகிறார்.

இன்னைக்கு மிகப்பெரிய நாள், ஒரு பெரிய அக்ரீமெண்ட் நந்தினி கையால் சைன் பண்ணி இருக்கோம் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். ஏகே குரூப் ஆஃப் கம்பெனி நம்ம கூட வந்து டைஅப் வச்சுப்பாங்கன்னு நம்ம நினைச்சோமா இப்போ எல்லாமே நடக்குது ஏன்னா நந்தினிக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுத்தது தான், சிலரால் ஏத்துக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை என சொல்லுகிறார். இத்தனை நாளா நம்ம கம்பெனி என்ன நடுரோட்டிலையா இருந்தது என்று மாதவி கேட்கிறார். அம்மா தான் நைட் பகல உழைச்சு இந்த கம்பெனியை உருவாக்கி வச்சிருக்காங்க என்று சொல்லுகிறார். சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு என்ன படிச்சிருக்க என்று கேட்க அஞ்சாவது பெயில் என சொல்லுகிறார். இதுக்கு மேல நீ எல்லார்கிட்டயும் இங்கிலீஷ்ல தான் பேசணும் என்று சொல்ல, அதுக்கு படிச்சிருந்தா தானே என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஈசியா பேசலாம் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்திடம் அங்க போய் இங்கிலீஷ்ல பேசாதீங்க என்று சொல்லி அனுப்ப கல்யாணம் சுந்தரவல்லி இடம் வந்து நோ தமிழ் ஒன்லி இங்கிலீஷ் என்று சொல்ல சுந்தரவல்லி கன்னத்தில் அறைகிறார். சூர்யாவோட கை உடைஞ்சதாலதான சைனிங்கா அதாரிட்டிய நந்தினிக்கு கொடுத்தான் அப்போ நந்தினியோட கை உடைந்தால் என்று சுரேகா சொல்ல சுந்தரவல்லி யோசிக்கிறார்.

மறுபக்கம் சூர்யா நந்தினியை எழுப்பி ஏ பார் ஆப்பிள் என்று சொல்ல தூங்கவிடாமல் டார்ச்சர் பண்றாரு என்று மனதில் நினைக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 02-08-25
Moondru Mudichu Serial Promo Update 02-08-25