தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலத்திடம் நந்தினி அவர் லேட்டா வந்தா சாப்பிடாம தூங்கிட்டாரு நான் அந்த கொஞ்சம் சாப்பாடு கொடுத்து தூங்க வைப்பேன் என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் சூர்யா காரை விட்டு இறங்கி கொய்யாப்பழம் சாப்பிடுகிறார் .
மறுபக்கம் நந்தினி சூர்யா சார் ஏன் இன்னும் வரல ஒருவேளை குடிச்சுட்டு வராரு என்று யோசித்துக் கொண்டே இருக்க தள்ளாடிக் கொண்டு நடந்து வருகிறார். உடனே உள்ளே வந்து நந்தினி பார்த்துவிட்டு இவ என்ன இங்க நின்னுகிட்டு இருக்கா எப்படியாவது மேனேஜ் பண்ணு சூர்யா என்று சொல்ல நந்தினி அமைதியாக பார்க்கிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


