சூர்யா சொன்ன வார்த்தை,அதிர்ச்சியில் மாதவி,சுரேகா..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாதவி சுரேகாவுடன் கேட்டை இழுத்து மூடுங்க அவ வெளியேவே நின்னு அசிங்கப்படட்டும் என்று சொல்ல அப்போ எப்ப இருந்தாலும் சூர்யா வரும்போது தெரியும் இல்ல என்று சொல்ல அவனுக்கு அப்பவாவது புரியட்டும் என்று சொல்லிவிட்டு வாட்ச்மேன் கிட்டயும் சொல்லி வைங்க அவ இந்த வீட்டில காலடி எடுத்து வைக்க கூடாது என்று சொல்ல அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் கிளம்பலாமா என்று கேட்க கல்யாணத்தையும் உதவிக்க வேண்டும் என அழைத்துச் செல்கின்றனர். பிறகு நந்தினி பாத்திரங்களை கழுவி காய வைக்க, விஜி நீ வேலைக்கு வர்றதனால ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லுகிறார்.அதே மாதிரி சூர்யா அண்ணா ஓட உதவியையும் நீ மறுக்காத என்று சொல்லுகிறார்.

அந்த வீட்ல உனக்கு ஏதாவது பிரச்சனைனா சூர்யா அண்ணா கிட்ட சொல்லிரு என்று சொல்ல அவர் ஏற்கனவே அவங்க அம்மாவும் எப்படி அவமானப்படுத்தலாம்னு காத்துக்கிட்டு இருக்காரு என்று சொல்ல, சரிக்கா நான் கிளம்புறேன் என்று சொல்ல, அதுதான் அண்ணா வரேன்னு சொல்லி இருக்காருல்ல என்று சொல்ல ஏற்கனவே காலைல ரொம்ப போன் பண்ணி வெறுப்பேத்துட்டாரு அவர் கூட ஜோடியா போய் இறங்கினா விசேஷமா ஆயிடும் என்று சொல்லிவிட்டு, நாளைக்கு காலையில வந்துருவேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் சிங்காரம் டியூட்டிக்கு வந்து விடுகிறார். இப்போ என்ன அக்கா பண்றது என்று சுரேகா கேட்க மாதவி அவ முதல்ல வரட்டும் என்று சொல்லுகிறார் . அவ வர்றதுக்கு முன்னாடியே தானே நம்ம கேட்டை சாத்திடுவோம் என்று முடிவெடுக்கின்றனர்.

பிறகு மாதவி அசோகனிடம் செக்யூரிட்டி கிட்ட போய் கேட்டை மூடச் சொல்லுங்க என்று சொல்லி அனுப்புகிறார். அசோகன் சிங்காரத்திடம் கேட்ட இழுத்து பூட்டிட்டு அந்த கார் ஷெட்ல போய் அமைதியா உட்கார்ந்திரு சூர்யா வந்தா மட்டும் தான் திறக்கணும் யார் வந்து தட்டி கத்துனாலும் திறக்க கூடாது முதல்ல போய் செய்ய சொல்ல அவரும் பூட்டிவிட்டு சென்று விட, கொஞ்ச நேரத்தில் நந்தினி வந்து இறங்கி பூட்டி இருப்பதை பார்த்து செக்யூரிட்டியை கூப்பிடுகிறார். பூட்டு ஆடும் சத்தம் கேட்ட சிங்காரம் நந்தினியை பார்த்து இப்ப கேட்ட திறக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்ன பண்றது என யோசிக்கிறார். உடனே கல்யாணத்தையும் கூப்பிட யாரும் வராததால் இவர்கள் மூவரும் மாடியில் நின்று ரசிக்கின்றனர். அதனை சிங்காரம் கவனித்து என்ன எதுவுமே சொல்ல மாட்றாங்க என்று யோசிக்கிறார். சூர்யா சாருக்கு போன் போடலாம் என்று யோசிக்க அவரை இதை ஒரு பிரச்சனையா பண்ணிடுவாரு என்று நினைத்து கல்யாணத்துக்கு கூப்பிட நான் வெளியே வந்திருக்கேன்மா என்று சொல்லிவிடுகிறார். சிங்காரம் அப்போ நந்தினி வெளிய நிக்க வைக்கணும்னு தான் பூட்ட சொன்னாங்களா என்று தவிக்கிறார் புஷ்பாவிற்கு ஃபோன் போட அவரும் எடுக்காததால், மாதவி சிரித்துக்கொண்டு பார்க்கிறார்.

யாராவது இருக்கீங்களா கேட்டை திறந்து விடுங்க என்று சொல்ல, மாதவி ராபிச்சக்காரங்க மாதிரி பேசுற பாரு என்று கிண்டல் அடிக்கிறார். இவங்க என்ன சிரிச்சுக்கிட்டு இருக்காங்க இதுக்கு மேல வேலையே போனாலும் பரவாயில்லை என்று சிங்காரம் ஓடிப்போய் கேட்டை திறக்க நந்தினி மயக்கமாகி கீழே விழ சிங்காரம் தாங்கி பிடித்து உட்கார வைக்கிறார். உடனே இவர்கள் மூவரும் வந்து சிங்காரத்தை எதுக்கு கேட்டு தரந்த என்று திட்டுகின்றனர். இவன் மயங்கி விழுந்தா உனக்கு என்ன வேலை நான் உனக்கு என்ன நீ உன் வேலையை பார்க்க வேண்டியதுதானே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒரு கட்டத்திற்கு மேல் சிங்காரத்தை மாதவி அறைந்து விடுகிறார்.

நந்தினி மயங்கி கிடக்க சூரியா வந்தவுடன் என்னாச்சு என்று மாதவியிடம் கேட்க, தெரியல சூர்யா நாங்க வந்து பார்த்தோம் மயங்கி கிடக்கிறா என்று சொல்ல சிங்காரம் கோபத்தில் குல்லாவை எடுத்து விட்டு என் புள்ள தானவா மயங்கி விழுந்துச்சு என்று கேட்க நந்தினி மயக்கத்திலிருந்து முழித்து அப்பா என கூப்பிடுகிறார். நீங்க எங்கபா இங்க என்று கேட்க, என்ன மன்னிச்சிடுங்க தம்பி ஒரு வாரம் செக்யூரிட்டி வேலை நைட்ல இங்க தான் பாக்குறேன் என்று சொல்லுகிறார். வேலைக்கு போன இடத்துல எனக்கு டியூட்டி இங்கே போட்டுட்டாங்க சரி நைட்டு தானே யாருக்கும் தெரியாமல் முடிச்சிட்டு போயிடலாம்னு தான் பார்த்தேன் ஆனா இப்படி ஆயிடுச்சு என் வயசுக்கு இப்படி ஒரு கொடுமையை நான் பார்த்ததே இல்லை என்று சொல்லி அழுகிறார்.

என் புள்ள கேட்டுக்கு வெளியே நிக்க வச்சு மாடியில் இருந்து அவ படுற கஷ்டத்தை பார்த்து ரசிச்சு சிரிக்கிறாங்க இந்தக் கொடுமையெல்லாம் என் கண்ணுக்கு முன்னாடியே நடக்குது என்று சொல்ல சூர்யா என்ன நடந்தது என்று டீடைலா சொல்லுங்க என்று சொல்ல, அசோகன் சொன்ன விஷயத்தை சூர்யாவுடன் சொல்ல, என் புள்ள கேட்ட தட்டுது யார் யாரோ போன் பண்ணுது ஆனா மாடில நின்னு ரசிக்கிறாங்களே தவிர கேட்ட திறந்து விட யாரும் சொல்லல, அவங்க எப்படி சொல்லுவாங்க என் புள்ளையை வெளியே நிக்க வைக்கிறது கஷ்டப்படுத்த தானே என்று சொல்ல, ஓ அப்போ நீங்க மூணு பேரும் அடுத்த லெவலுக்கு போய்ட்டீங்களா உங்க கூட்டணி ரொம்ப ஸ்ட்ராங்காயிடுச்சா இதுக்கு தான் நீ அவர் அடிச்சியா என்று கேட்க எனக்கு இவர் இருப்பார் என்று தெரியாது என்று சொல்ல அப்ப யாரா இருந்தாலும் அடிச்சு இருப்பியா அதெல்லாம் சரி அவளை எதுக்கு வெளியில நிக்க வச்சீங்க என்று கேட்க, அசோகன் ரெண்டு பேரும் ஒண்ணா போனீங்க, தனித்தனியா வருவீங்கன்னு தெரியாது என்று சொல்லுகிறார். நந்தினி வரும்போது திறக்கக் கூடாதுன்னு உலக ஐடியாவை யார் கொடுத்தது என்று சூர்யா கேட்க அசோகன் உங்க அம்மா தான் மாப்பிள்ளை என்று சொல்லி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினியை வெளியில் வைத்து பூட்டியதால் சிங்காரம் சூர்யாவிடம் உண்மைகளை சொல்லிவிட சூர்யா மாதவி சுரேகா அசோகன் மூவரையும் வெளியில நிற்க வைத்துவிட்டு கதவை சாத்தி விடுகிறார்.

உடனே சூர்யா நந்தினி இடம் ஒரு நாள் ஃபுல்லா உன்னை வெளிய நிக்க வைக்கணும்னு நினைச்சாங்கல்ல அவங்களும் அதே மாதிரி நிக்கட்டும் அப்பதான் அதோட வலி தெரியும் என சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

7 hours ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

8 hours ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

9 hours ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

9 hours ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

9 hours ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

10 hours ago