மக்களைத் தவறாக வழி நடத்துவதா? – ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை
நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்..
தமிழ்த்திரையை தொடர்ந்து தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார், ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது உடலில் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக டாக்டர் பிரசாந்த் என்பவர், சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார். அதில், ரகுல் ப்ரீத் சிங்கின் தற்போதைய மற்றும் முந்தைய புகைப் படங்களை வெளியிட்டுள்ளார்.
கன்னம், தாடையை மேம்படுத்த ரகுல் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் ஃபில்லர்களைப் பயன்படுத்தியதாகவும் மூக்கு அறுவை சிகிச்சையை செய்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த மருத்துவரை ரகுல் ப்ரீத் சிங் கடுமையாக விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், ‘மோசடி எச்சரிக்கை: இவரைப் போன்றவர்கள் தங்களை மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு எந்த ஆதாரமும் இல்லாமல் அறிக்கைகளை வெளியிடுவதும் மக்களைத் தவறாக வழிநடத்துவதும் அச்சத்தைத் தருகிறது. பழங்கால மற்றும் நவீன அறிவியலைப் புரிந்துகொண்ட ஒரு நடிகையாக இருக்கிறேன்.
மக்கள் அறுவை சிகிச்சைகள் செய்தால் அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கடின உழைப்பின் மூலம் எடையைக் குறைக்க முடியும் என்ற மற்றொரு விஷயமும் இருக்கிறது. அதைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என கேட்டுள்ளார்.
விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…
'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…
‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…
'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’…
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக…
Minnu Vattaam Poochi Lyric Video | Sirai | Vikram Prabhu | LK Akshay Kumar |…