தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது.
மேலும், பாடல்கள் பட்டித்தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
ஆனால், சமீபத்தில் பலருக்கும் உள்ள ஒரு கேள்வி தற்போது மாஸ்டர் டிஜிட்டலில் வருமா என்று தான்.
பலரும் பல கோடிகள் கொடுத்த மாஸ்டரை வாங்க தயாராக இருந்து வருகிறார்களாம்.
ஆனாலும், படக்குழு தற்போது வரை வாய் திறக்காமல் இருந்து வந்தது, இதை தொடர்ந்து பலரும் மாஸ்டர் OTTயில் வரும் என கூறினர்.
தற்போது தயாரிப்பு தரப்பு இதை மறுத்துள்ளது, அதோடு மாஸ்டர் எத்தனை நாட்கள் ஆகினும் தியேட்டரில் தான் வரும் என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு கண்டிப்பாக சந்தோஷமான செய்தி தான்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…