தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்க அவருடன் இணைந்து ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. பலரும் இப்பாடலுக்கு நடனம், டிக் டாக் என அசத்தி வரும் நிலையில் இரண்டு கைகளையும் இழந்த ரசிகர் இதற்கு ட்யூன் போட்டுள்ளார்.
இந்த வீடியோவை அனிருத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ
View this post on Instagram
Mindblown ! Just pure amazing talent ???????????????? God bless you brother!

