தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. குறிப்பாக மதிய வேளையில் இதயம் சீரியல் மாலை நேரங்களில் ப்ரைம் டைம் சீரியல்கள் ஒவ்வொன்றிற்கும் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் குழந்தைகளை மையமாக வைத்து அம்மாவை இழந்த குழந்தைகளுக்கு தாயாக வந்து பாசத்தை கொட்டும் பெண்ணின் கதையாக நினைத்தேன் வந்தாய் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதே பாணியில் தற்போது வேறு ஒரு சேனலில் மல்லி என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
பேரன்பு சீரியல் புகழ் வெங்கடேஷ் விஜய் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கார்த்திக் மனைவியை இழந்தவராக மகளுடன் வாழ்ந்து வர அவர் நான் தான் என் அப்பாவோட தேவதை, நான் என்ன கேட்டாலும் வாங்கி தருவார். ஒண்ணே ஒன்னை தவிர என்று பீச்சில் அம்மா என்று எழுதுகிறார்.
இதை பார்த்த ஹீரோ உனக்கு நான், எனக்கு நீ. நம்ம ரெண்டு பேருக்குள்ள இந்த உறவுக்கு இடமில்லை என்று சொல்கிறார், தாய் பாசத்திற்காக ஏங்கும் குழந்தைக்கு நாயகி அம்மாவாவது தான் இந்த சீரியலின் கதை என்பது தெளிவாகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் இது நினைத்தேன் வந்தாய் சீரியல் கதை தானே என்று கலாய்த்து வருகின்றனர். இது குறித்த கமெண்ட்டுகளை ப்ரோமோ வீடியோவில் பார்க்க முடிகிறது.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…