கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மண்டேலா திரைப்படத்தை இயக்கி பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளத்துடன் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.
பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பாடல் காட்சி Mocobot எனப்படும் பிரத்தியேக கேமராவுடன் உருவாகி வருவதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ஷோபி மாஸ்டர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்பாடலின் படப்பிடிப்பு வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் பயங்கரமாக வைரலாகியும் வருகிறது.
Our #Prince @Siva_Kartikeyan Anna's IG story ????
After #Beast & #Vikram , #Mocobot camera is used for our #PrinceSK Anna's #Maaveeran ????
???? : https://t.co/1QcylwXlyb
Excitement overloaded ????
@madonneashwin #Vidhuayyana @ShanthiTalkies @iamarunviswa @shobimaster pic.twitter.com/FD0HsKGqq8
— All India SKFC (@AllIndiaSKFC) February 10, 2023