Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மெட்ரோ டிரெயினில் மாவீரன் போஸ்டர். ப்ரோமோஷனில் இறங்கிய படக்குழு

maaveeran movie metro promotions photos viral update

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் பயங்கரமான வரவேற்பை பெற்று படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு முழு வீச்சில் நடத்தி வருகிறது. அது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது பிரமோஷனுக்காக மெட்ரோ ட்ரெயின் ஒட்டப்பட்டு இருக்கும் மாவீரன் படத்தின் போஸ்டர்களின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.