love oh love movie review
தனது சம்பாதிக்கும் பணம் முழுவதையும் தந்தையிடம் ஒப்படைத்து பொறுப்பான இளைஞராக வாழும் பவிஷ், நாக துர்காவை காதலிக்கிறார். ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் நாக துர்காவின் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பவிஷ், ஒரு கட்டத்தில் அவரைப் பிரிய முடிவு செய்கிறார்.
ஆனால், பவிஷை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக இருக்கும் நாக துர்காவிடம், கடந்த நான்கு ஆண்டுகளாக தான் செய்த செலவுகளை நான்கு மாதங்களில் செய்து காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை பவிஷ் வைக்கிறார். அந்தச் சவாலை நாக துர்கா ஏற்றுக்கொண்ட பிறகு என்ன நடக்கிறது? இருவரும் இணைந்தார்களா அல்லது பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தனுஷின் மருமகனான பவிஷ், கதாநாயகனாக நம்பிக்கையூட்டும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனத்திலும், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் தனது திறமையை நிரூபிக்கிறார். குறிப்பாக காதலியின் பொறுப்பற்ற செயல்களால் கோபப்படும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். சில இடங்களில் தனுஷின் நடிப்பு சாயல் தெரிகிறது.
கதாநாயகியாக நடித்துள்ள நாக துர்கா, இயல்பான தோற்றத்திலும், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பிலும் கவர்கிறார். கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், எளிமையான காதல் கதையுடன் கமர்ஷியல் அம்சங்களை கலந்து குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளார். நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. இருப்பினும், சில லாஜிக் குறைபாடுகள் ஆங்காங்கே தென்படுகின்றன.
பி.ஜி. முத்தையாவின் வண்ணமயமான ஒளிப்பதிவும், பாக்ஸன் இசையும் படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகின்றன.
மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான காதல் திரைப்படம்.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…