விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “மும்பையில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பைனல் கட்டை பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. விஷுவலாக பார்க்கும் பொழுது விக்ரம் அருமையாக உள்ளார். விநாயக் கவனத்தை ஈர்க்கிறார். அனைவரும் திறமையாக நடித்துள்ளனர். படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…
ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…
இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…