Mrunal Thakur and Pooja Hegde Steal the Spotlight at Trailer Launch
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’. மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டே கதாநாயகிகளாக நடித்துள்ள இப்படம், குடும்ப உறவுகள் மற்றும் எதிர்பாராத கர்ப்பம் சார்ந்த சம்பவங்களை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில், மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டேவின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இரு நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி டிரெண்டாகி வருகின்றன. மேலும், 74 வயதான இயக்குநர் டேவிட் தவான், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக திரும்பியிருப்பதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…