Irattaiyar movie release date announced
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த படம், மர்மம் மற்றும் திகில் கலந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
ஒரு விபத்தில் தந்தையை இழந்த குடும்பத்தில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் தாயின் விசித்திரமான நடத்தை, அவரது இரட்டை மகள்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்த மர்மத்தின் பின்னணியை கண்டறிய அவர்கள் மேற்கொள்ளும் தேடலே படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.
இப்படத்தில் அபிநயா தாயாக நடித்துள்ள நிலையில், இரட்டை மகள்களாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணிய சிவா, சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திட்டக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 21 நாட்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘இரட்டையர்’ திரைப்படம் வரும் **ஜூன் 5-ஆம் தேதி** உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…