Simbu to Play Triple Roles in ‘Arasan’
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா மற்றும் இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஈசிஆர் கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமான வடசென்னை செட் அமைக்கப்பட்டு, சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் அமீர் இணைந்து இடம்பெறும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக சிம்பு இளமை மற்றும் முதுமை என இரு தோற்றங்களில் நடிப்பார் என தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் ராஜன், அரசன், அன்பு என மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உண்மையாக இருந்தால், ‘அரசன்’ திரைப்படம் சிம்பு ரசிகர்களுக்கு இந்த தீபாவளியில் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…