லியோ படத்தில் பாடல் பாடியுள்ள பிக் பாஸ் பிரபலம். எந்த பாடல் தெரியுமா?

கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் திரைப்படம் லியோ. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அனிருத் இசையமைப்பில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான முன்னணி திரை நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்படம் தொடர்பான அப்டேட்கள் அதிக அளவில் இணையதளத்தில் வெளியாகி படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கும் நிலையில் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கிய பாடலான நா ரெடி என்னும் பாடல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்பாடலை தளபதி விஜய் பாடி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது புதிய அப்டேட்டாக அப்பாடலை விஜய் உடன் இணைந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அசல் கோளாறு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் ஜோர்தாலே பாடல் மூலம் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

leo-movie-naa-ready-song-update
jothika lakshu

Recent Posts

Scene Official Trailer

Scene Official Trailer | Suriya | Nazriya Nazim | Naslen | Sushin Shyam | Jithu…

15 hours ago

9 வயதிலேயே 12 மொழிகள் தெரியும்… அசின் மகளின் திறமை!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின்…

2 days ago

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சிம்பு – நயன்தாரா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. அந்த வகையில், சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்…

2 days ago

பொங்கல் 2027-ல் வெளியாகும் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா, சபீர்,…

2 days ago

பாக்கெட் நாவல் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்

தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘#PocketNovel’ (பாக்கெட் நாவல்). ‘ஆரண்ய காண்டம்’,…

2 days ago

ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டதா? ஜேசன் சஞ்சய் அதிரடி விளக்கம்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையே விரைவில் கதாநாயகனாகவும் களமிறங்க…

2 days ago