லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘லியோ’ திரைப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடி வசூல் செய்த நிலையில் ‘லியோ’ திரைப்படம் அதன் வசூலை முறியடித்துள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Fireproof Box Office Records???? There's nothing you can do????
540+ Crores gross collection in just 12 Days ????#Leo Worldwide Badass Box Office Sambavam ❤️????#LeoIndustryHit#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial… pic.twitter.com/L3gRnU6jRm
— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023

