Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்

keerthy suresh upcoming movie

மாதவனின் இறுதிச்சுற்று, சூர்யாவின் சூரரைப் போற்று போன்ற வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் சுதா கொங்கரா. இவர் தற்போது சூரரைப் போற்று படத்திற்காக ஐந்து தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது இப்படத்தின் இந்தி ரீமைக்கை இயக்கி வரும் சுதா கொங்கரா அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இவர் அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படம் ஒன்றை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகின்றது.

keerthy suresh upcoming movie
keerthy suresh upcoming movie