“Kaviya Kadhal” title announcement video wins fans’ attention!
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான “காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
“மாவீரன்” மற்றும் “3BHK” போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், நடிகர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் தனது அடுத்த படைப்பை முதலில் “புரொடக்ஷன் நம்பர் 4” என அறிவித்திருந்தது. தற்போது அந்த படத்திற்கு “காவிய காதல்” என தலைப்பு வைக்கப்பட்டு, அதன் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கலர்ஃபுல் காட்சிகளுடன் வெளியான இந்த வீடியோ, இளம் ரசிகர்களையும் குடும்ப பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது. வீடியோவில் இடம்பெற்றுள்ள உற்சாகமான காட்சிகளும், கதாபாத்திரங்களின் லுக் மற்றும் காமெடி டச் ஆகியவை ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.
இப்படத்தில் நடிகர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். “குடும்பஸ்தன்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற சான்வே மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் நகைச்சுவை அம்சத்திற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“காவிய காதல்” திரைப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்கியுள்ளார். இது ஒரு சுவாரஸ்யமான ரொமான்டிக் எண்டர்டெயினராக உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், கலை இயக்குநராக சி.எஸ். பாலச்சந்தர், ஆடை வடிவமைப்பாளராக கிருத்திகா சேகர் மற்றும் இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா பணியாற்றுகின்றனர்.
“காவிய காதல்” படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…