kavin-shared-interesting-news-about-director-nelson
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பவர் நெல்சன் திலிப் குமார். முதல் படமான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருந்த இவர் அதனைத் தொடர்ந்து டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார். தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வரும் நெல்சன் அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்க இருப்பதாகவும் சில தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் மூலம் பிரபலமாகி தற்போது வளர்ந்து வரும் பிரபல நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் கவின் அவர்கள் நெல்சன் குறித்து பகிர்ந்திருக்கும் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் கவின் வளர்ந்து வந்த காலகட்டத்தில் நடிப்பதற்கான சான்ஸ் கிடைக்காத போதெல்லாம் இயக்குனர் நெல்சன் திலிப் குமாருடன் உதவி இயக்குனராக பணியாற்றி வருவாராம்.
அந்த வகையில் நெல்சன் டாக்டர் திரைப்படத்தை இயக்கி வரும் போது கவினுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்திருந்ததாம். அதில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்து வந்த கவின் இயக்குனர் நெல்சன் இடம் போகவா என கேட்டபோது அதற்கு நெல்சன் ‘நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?’ எனக் கேட்டுள்ளாராம் அதற்கு கவின் ‘சும்மாதான் இருக்கேன்’ என கூற இங்க நீ சும்மா இருக்கிறதுக்கு பிக் பாஸ்க்கு போ எனக்கூறி பங்கமாக கலாய்த்து உள்ளாராம். அதன் பிறகு தான் அந்நிகழ்ச்சியில் கவின் கலந்து கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…