தமிழ் சினிமாவில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கவின். தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார். இதன் மூலம் கவினின் ரசிகர்கள் பட்டாளம் பல மடங்காக கூடியது.
மேலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான லிப்ட் என்ற திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக எம் ராஜேஷ் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேஷ் பாபு என்பவரின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்கிறார். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின், அபர்ணா தாஸ் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கியுள்ளது.
