Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு : ரிலீஸ் குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட திருப்பூர் சுப்பிரமணியம்.!!

Karuppu Tirupur Subramaniam shared interesting information about the release.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

ஏற்கனவே இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது இதுகுறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றின் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடம் கேட்டபோது அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அதாவது பெஸ்டிவல் டைம்ல படம் வரும்னு எதிர்பார்த்துட்டு இப்படி தள்ளிப்போறதுனால நீங்க இத பத்தி பேச மாட்டீங்களா என்று கேட்க அதற்கு அவர் இதைப்பற்றி நான் புரொடியூசர் எஸ் ஆர் பிரபுவிடமே பேசினேன் அதற்கு அவர் இரண்டு பெரிய படங்கள் வருவதால் மூன்றாவதாக வந்தால் சரியா வராது தியேட்டர்ஸ் ஸ்பிலிட் ஆகும் என்று சொன்னதாகவும் கூறியிருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் நாங்க அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் வரலாம்னு இருக்கோம் அப்படி இல்லன்னா ஜனவரி end இல்ல பிப்ரவரி ஃபர்ஸ்ட் ல வர திட்டம் இருப்பதாக தயாரிப்பாளர் கூறியதாக சொல்லி இருக்கிறார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Karuppu Tirupur Subramaniam shared interesting information about the release.!
Karuppu Tirupur Subramaniam shared interesting information about the release.!