தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது ஆர்.ஜே பாலாஜி இயக்கிய இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
மேலும் சுவாசிகா,யோகி பாபு, நட்டி நடராஜ்,சுப்ரீத் ரெட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது அதாவது அக்டோபர் 1ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுக்க இருந்து பார்க்கலாம்.
