அயலான் படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்த நடிகர் கருணாகரன். என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து நாளை வெளியாக இருக்கும் ‘அயலான்’ படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது என்பவர் இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பேசியதாவது, சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்களுடனும் கலந்தாலோசித்து சிறப்பான அவுட்புட்டைக் கொண்டு வருவார் சிவா.

அதேபோல, இயக்குனர் ரவிகுமாரும் சிறந்த தொழில்நுட்பக்குழுவையும் புதிய ஐடியாவையும் இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவிகுமார் இருவரும் படத்தின் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை தான் எங்கள் பலம். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும். ஏ.ஆர். ரகுமானின் இசை படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயினராக, குறிப்பாக குழந்தைகளுக்கான படமாக ‘அயலான்’ வந்துள்ளது என்றார். ‘அயலான்’ தவிர நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ’96’ புகழ் பிரேம்குமார் இயக்கும் புதிய படம், நளன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார் கருணாகரன். இதுமட்டுமல்லாது, நாகசைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். மேலும், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்கும் புதிய படம், மிர்ச்சி சிவாவுடன் ‘சூது கவ்வும் 2’ மற்றும் கருணாகரன் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘குற்றச்சாட்டு’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவரது கைவசம் உள்ளது.”,

karunakaran latest speech-goes-viral
jothika lakshu

Recent Posts

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

26 seconds ago

‘டோரதி’ ஒரு தலைச்சிறந்த படைப்பு – படக்குழுவினருக்கு தனுஷ் பாராட்டு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது…

8 minutes ago

Yezhu Kadal Yezhu Malai Release Trailer

Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…

22 hours ago

Oru Chinna Panithuli Lyric Video

Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…

23 hours ago

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

1 day ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

1 day ago