Actor Jeevan Makes His Comeback with Lover Boy
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.
இதனைத் தொடர்ந்து ‘நான் அவனில்லை’, ‘திருட்டுப் பயலே’, ‘மச்சக்காரன்’, ‘தோட்டா’, ‘நான் அவனில்லை 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். தொடர்ந்து சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஜீவன், 2015-ல் வெளியான ‘அதிபர்’ படத்தில் நடித்தார். அதன் பின்னர் ‘பாம்பாட்டம்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் மீண்டும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அசோக்குமார் இயக்கத்தில் அர்ஜித் சங்கர் மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் ஜீவன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
இதன் மூலம் ஜீவன் மீண்டும் திரையுலகில் ஆக்டிவாகியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…