“தக் லைஃப்”படத்தில் இணைந்த பிரபல நடிகை.படக்குழு அறிவிப்பு

“பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’ (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளதாக நேற்று படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்திருந்தது.தக் லைஃப் போஸ்டர்இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தது குறிப்பிடத்தகக்து.

jothika lakshu

Recent Posts

நடிகையான பிறகு தனிப்பட்ட சுதந்திரம் குறைந்துவிட்டது – நடிகை கவுரி கிஷன்!

தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’…

1 hour ago

‘படையப்பா 2’ உருவாக வாய்ப்பு? கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரசியத் தகவல்!

பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தின் இரண்டாம்…

2 hours ago

எனக்கே வாழ்க்கையில் நியாயம் கிடைக்கவில்லை – நடிகர் சரவணன்!

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. சரவணன், வரலட்சுமி சரத்குமார், கவிதா பாரதி, வெற்றி,…

2 hours ago

கனடாவில் திடீரென நிறுத்தப்பட்ட ‘ஜெயிலர் 2’ திரையிடல்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின்…

3 hours ago

துபாயில் பிரம்மாண்ட ‘Scene’ பட புரமோஷன் நிகழ்ச்சி

‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம்…

3 hours ago

Ravana Tandavam Song

Ravana Tandavam Song | Ramayana | Ranbir, Yash | Namit M, Nitesh T | AR…

20 hours ago