பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ,மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவரது இயக்கத்திலும் சூர்யா நடிப்பிலும் வெளியான திரைப்படம் ரெட்ரோ இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்புராஜ்.. திரைப்படங்கள் உங்களை எப்போதும் பாதிக்காது என்றும், ஒரு சிலர் மக்களை திரைப்படங்களுக்கு போக விடாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் மது குடிப்பதை சிகரெட் பிடிப்பதை தடுப்பது நல்லது. ஆனால் படம் பார்ப்பது ஏன் தடுக்க வேண்டும் ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் அவர்கள் முடிவு செய்யட்டும் என்றும் சொல்லியுள்ளார். மேலும் “நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்” என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
