ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் முதல் காட்சியை எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தனர். மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “யானையும் சினிமாவும் கடவுள் நமக்கு கொடுத்த சிறந்த பரிசு. சினிமாவின் சக்தியையும் அதன் பார்வையாளர்கள் குறித்த எங்களின் மனப்பூர்வமான வெளிப்பாடு இது.
இந்த படத்தை நாங்கள் உருவாக்கும் போது கொடுத்த அன்பை நீங்களும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். 4.5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வருவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். படத்தில் இருக்கும் சர்ப்ரைஸை தயவு செய்து உடைத்து விடாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…