Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விபத்தின் காரணமாக சூரியா படப்பிடிப்பிலிருந்து இரண்டு வாரம் ஓய்வு.வைரலாகும் தகவல்

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘கங்குவா’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

‘கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது, நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், விபத்தில் காயமுற்ற நடிகர் சூர்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அவர் இரண்டு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே சூர்யா இடம்பெறாத காட்சிகளை படமாக்கும் பணிகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Kanguva movie shooting update viral
Kanguva movie shooting update viral