தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டூடியோவில் நிறுவனம் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்த நிலையில் முழு வீச்சில் நடைபெற்று வரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் சிறிய படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து முடியும் என்றும் அதன் பிறகு ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், பாங்க்காக்கிலும் ஒரு சில காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
