நடிகை கங்கனா ரணாவத் கொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பேசி உள்ளார். அவர் கூறியதாவது:
‘’ஊரடங்குக்கு பிறகு ஒரு நடிகையாக எந்த மாதிரி நிலைமைகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஊரடங்கு முடிந்ததும் நாம் நடிக்கும் படங்கள் நிலைமை, வியாபாரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
இன்னும் எந்த மாதிரி விளைவுகளை சந்திக்க போகிறோம் என்பதையும் இப்போது கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. சில படங்களை தியேட்டர்களில் பார்த்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறாக இருக்கிறது. கொரோனாவால் எதிர்காலத்தில் டிஜிட்டல் தளத்துக்கு சினிமா மாறும் என்றுதான் தோன்றுகிறது. நடிகையாக நான் ஜெயித்து விட்டேன். தொடர்ந்து நடிக்கிறேன்.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன். எதிர்காலத்தில் டிஜிட்டல் தளத்துக்கு செல்ல தயாராகவும் இருக்கிறேன். ஆனாலும் சினிமாவில் நான் சாதிக்க வேண்டியதும் கற்றுக்கொள்ள வேண்டியதும் இன்னும் நிறைய இருக்கிறது. தலைவி படத்தில் விரும்பி நடித்துள்ளேன். இந்த படத்துக்காக நிறைய உழைத்தும் இருக்கிறேன்.
நான் நடிக்கும் படங்களை தியேட்டர்களில் பார்க்கத்தான் ஆசைப்படுகிறேன். இப்போதுள்ள நிலையில் தியேட்டர்களில் எப்படி படம் பார்க்க போகிறோம் என்பதை யூகிக்கவே முடியவில்லை.” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar