விக்கி டோனர் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் ஆயுஷ்மான் குரானா. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகின்றன.
அந்தவகையில் இவரின் விக்கி டோனர் படத்தை தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர்.
அதேபோல் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த அந்தாதூன் படமும் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் ஆயுஷ்மான் குரானாவின் படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என தெரிவித்தனர்.
அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என அவர்கள் கூறினர். இதற்கு ஆயுஷ்மான் குரானா, ‘சூர்யா, ஜோதிகா உங்களின் அன்புக்கு மிக்க நன்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…