பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கடிதம்

பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கடிதம்

ஹிந்தி திணிப்புக்கு எதிரான கதைக்களம் பராசக்தி படம் என்பது தெரிந்ததே. இந்நிலையில் கமல் வெளியிட்டுள்ள கடிதம் காண்போம்..

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன். அந்தக் கடிதத்தில்,

‘துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ‘பராசக்தி’ படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப் போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று.

ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்

பின்குறிப்பு: பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக் கொண்டதால் பின் தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்‌ஷன் கதையையும், இதன் இயக்குநர் சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.

இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூர்யா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்’ என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Kamal Haasan writes to Deputy Chief Minister Udhayanidhi Stalin after watching the movie Parasakthi
dinesh kumar

Recent Posts

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள லெஹங்காவில் மின்னிய ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…

4 hours ago

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பாகம் 3’ பணிகள் விறுவிறுப்பு!

தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…

4 hours ago

‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் மிரட்டல் தோற்றம் வெளியீடு!

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…

4 hours ago

“அமீர் கானால் கூட முடியாது!” – ‘ட்ரெய்ன்’ பட விழாவில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…

4 hours ago

வெளியாகிறது ‘தி ஒடிஸி’ மேக்கிங் வீடியோ – எந்த ஓடிடியில் தெரியுமா?

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள 'தி ஒடிஸி' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோமரின்…

4 hours ago

Don’t Trouble the Trouble Teaser

Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti

1 day ago