திருட்டுக் கும்பலிடம் சிக்கிய காதலியை மீட்க போராடும் காதலன் – வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கடத்தல்காரன்!

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான கடத்தல்காரன் திரைப்படம் டிசம்பர் 4ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு திரைப்படங்களை உருவாகி வருகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே வித்யாசமான கதைக் களத்தோடு உருவாகின்றன.

அப்படி முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக் களத்தோடு உருவாகியுள்ள திரைப்படம் தான் கடத்தல்காரன்.

எப் 3 பிலிம்ஸ் சார்பில் பிரயா, பெனி, பெலிக்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடத்தல்காரன். எஸ்.குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் கெவின் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ரேணு செளந்தர் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் கூறியதாவது, கடத்தலை குலத் தொழிலாகக் கொண்ட ஒரு கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் எந்த பொருளை திருடினாலும் மக்கள் அதனை சரி சமமாகப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம்.

திருமண வீட்டில் நகைகளை திருடும் போது மணப்பெண்ணை சேர்த்து கடத்தி விடுகிறார்கள். நகைகளை சரி சமமாக பங்கிட்டுக் கொண்ட இவர்கள் மணப்பெண்ணை எப்படி பங்கிடுவது என யோசிக்கின்றனர்.

அதிலிருந்து காதலன் தன் காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை என கூறி உள்ளார்.

இப்படத்தை வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suresh

Recent Posts

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

54 minutes ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

1 hour ago

தனுஷின் ‘D56’… மாரநாடு கருப்பசாமி அருளுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…

1 hour ago

மகாநதி லட்சுமி பிரியா எவிக்ட்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…

1 hour ago

One Sun One Moon Lyric Video

One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…

2 hours ago

Love Official Trailer

Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India

2 hours ago