kaavaalaa-song-telugu-update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் இருந்து காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் வரும் ஜூலை 28ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான காவாலா பாடலை தெலுங்கானாவில் பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் வெளியிடப் போவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இன்று நடைபெறவிருந்த ‘காவாலா’ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு இணையதளங்களில் வெளியாகும் எனவும் படகுழு அறிவித்துள்ளது. இந்த தகவல் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து வைரலாகி வருகிறது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…