K Rajamannar About Beast Movie Collection
பீஸ்ட் மற்றும் விஜய் பற்றி சில திரையரங்க உரிமையாளர்கள் பொய் கூறி வருகின்றனர் என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக சில தொலைக்காட்சி விவாதங்கள், யூ ட்யூப் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பீஸ்ட் படத்தையும், நடிகர் விஜய் பற்றியும் மட்டம் தட்டும் விதமாக சில திரையரங்க உரிமையாளர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றார்கள்.
KGF2 என்பது சினிமாவில் அரிதாக வரும் ஒரு பிரம்மாண்ட படைப்பு மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..ஆனால் அதே சமயம் பீஸ்ட் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் செய்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது,தமிழ்நாட்டில் எந்த தியேட்டருக்கு MG அடிப்படையில் படத்தை திரையிடவில்லை, யாருக்கும் நஷ்டம் ஏற்படவும் இல்லை, 2022ல் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் பீஸ்ட் என்பதே நிதர்சனமான உண்மை, நடிகர் விஜய் படத்தை திரையிட்ட அனைத்து திரையரங்குகளுமே பெரிய லாபம் அடைந்துள்ளனர்.
கொரோனா காலத்தில் அனைத்து திரையரங்குகள் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் பாதிக்கப்பட்டு இருந்து போது OTTல் படத்தை திரையிடாமல் அந்த கடுமையான கொரோனா சூழலிலும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு கொண்டு வர காரணம் நடிகர் விஜய்.அன்று அவரை திரையரங்குகளுக்கு வாழ்வு தந்த விஜய் என்று புகழ்ந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று எதோ ஒரு உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே பீஸ்ட் படத்தை பற்றி எதிர்மறை கருத்துக்களை பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அனைத்து படங்களையுமே மிக நேர்த்தியாகவும், மாபெரும் வெற்றி படமாக எந்த நடிகராலும் தரமுடியாது சில படங்களில் குறைகள் இருக்கத் தான் செய்யும் அதை ரசிகர்கள் விமர்சிக்கலாம் ஆனால் அந்த நடிகர் படம் மூலமும் லாபம் அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று அவர்களையே ஏளனம் செய்வது மிகவும் தவறான செயல்.நன்றி மறப்பது நன்றன்று என கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் கே ராஜமன்னார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…
‘ரோஜா கூட்டம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘போஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி 2009ஆம் ஆண்டு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஏற்பட்ட கருத்து…
எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக்…
Hellallallo Video | Peddi (TAMIL) | Ram Charan | Buchi Babu | Shruthi Haasan |…