jailer-movie-first-single-release-time-update
இந்திய திரை உலகில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாராக என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இவரது நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பலமொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதை தொடர்ந்து இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான அறிவிப்பு வெளியானது.
அதன்படி, இன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “காவலா (வேணுமா)” என்னும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக தமன்னா இடம்பெற்றிருக்கும் சூப்பர் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அப்போஸ்டரை பார்க்கும்போது புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய “ஊ சொல்றியா மாமா” பாடல் போல் இப்பாடல் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…