actor udhayanidhi-stalin-viral-tweet-about-vadivelu
தமிழ் சினிமாவில் பிரபல விநியோகிஸ்தர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வளம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். முன்னணி நடிகராகவும் கலக்கி வரும் இவர் தற்போது அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அதனால் படங்களில் நடிப்பதை தவிர்க்க இருக்கும் இவர் தனது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
பகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மதியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்த நிலையில் உதயநிதி அவர்கள் படக்குழுவினருடன் மாமன்னன் திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்பை பெற்று வரும் நடிகர் வடிவேலுவை அவரது இல்லத்தில் சந்தித்து மாலை அணிவித்து கௌரவ படுத்தியுள்ளார். மேலும் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர், “தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்”. என்று குறிப்பிட்டு வீடியோவுடன் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…
திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…
சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…
Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…