Director Vijay Thanks Ajith Kumar for the Unforgettable Le Mans Experience
சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித் குமார் தற்போது ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
பிரான்சின் புகழ்பெற்ற Circuit des 24 Heures du Mans ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த உலகப் புகழ்பெற்ற சகிப்புத்தன்மை கார் பந்தயத்தில், ‘Ajith Kumar Racing’ அணி பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனையை படைத்தது. லெ மான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக முழுமையான இந்திய அணியாக களமிறங்கிய அஜித் குமார் ரேசிங், கடுமையான போட்டியை எதிர்கொண்டு சிறப்பான முடிவுகளைப் பதிவு செய்துள்ளது.
மொத்தம் 62 கார்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், அஜித்தின் அணியின் இரண்டு கார்களும் சிறப்பாக செயல்பட்டன. கார் எண் 16 தனது பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து 9-வது இடத்தைப் பெற்றது. அதேபோல் கார் எண் 36, ஒட்டுமொத்த தரவரிசையில் 13-வது இடத்தைப் பிடித்து கவனம் ஈர்த்தது.
இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து, அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார், குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகின.
இந்நிலையில், இயக்குநர் விஜய் தனது சமூக வலைதள பதிவின் மூலம் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) கார் பந்தயத்தை நேரில் கண்டு ரசிப்பதற்கும், அந்த அனுபவத்தை பதிவு செய்வதற்கும் என்னை அழைத்த அஜித் சாருக்கு மனமார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் விஜயின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. திரையுலகிலும் பந்தய உலகிலும் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டிவரும் அஜித் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…