jackson-sanjay-in-first-movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தளபதி விஜயின் மகன் சஞ்சய் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற உப்பெண்ணா படத்தின் தமிழ் ரீமேக் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் தெலுகுவில் நாயகியாக நடித்த கீர்த்தி ஷெட்டி நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தாலும் இது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதே சமயம் ஏற்கனவே பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய்யை தனது இயக்கத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்ய அந்த வாய்ப்பை தனது மகன் மறுத்துவிட்டார் என விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனால் சஞ்சய் இந்த வாய்ப்பை ஏற்று ஹீரோவாக அறிமுகமாவாரா? அல்லது மறுத்து விடுவாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…